News September 30, 2025
மோடி லடாக்கிற்கு துரோகம் செய்கிறார் – ராகுல் காந்தி

கார்கிலில் ராணுவ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது, பிரதமர் மோடி லடாக்கிற்கு செய்யும் துரோகம் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மாநில அந்தஸ்து கோரி போராடும் லடாக் மக்களுடன், அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், துப்பாக்கிச் சூடு குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News April 2, 2026
டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த KKR

SRH அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற KKR பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் KKR களமிறங்கும் நிலையில், SRH அணியில் ஷிவாங் குமார் இணைந்துள்ளார். முதல் போட்டியில் இரு அணிகளும் தோல்வி அடைந்ததால் முதல் வெற்றிக்காக இன்று கடும் போராட்டம் இருக்கும். கடந்த போட்டியில் இரு அணிகளின் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், பவுலிங்கே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
News April 2, 2026
EPS மீது தனபால் கடும் அதிருப்தி!

அவிநாசி தொகுதிக்காக விருப்பமனு அளித்தும், தேர்தலில் போட்டியிட விருப்பமா என யாருமே கேட்கவில்லை என தனபால் வேதனை தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர், ஜெ., மறைவுக்கு பிறகு ஆட்சிக்கு எதிராக 18 MLA-க்கள் போர்க்கொடி தூக்கினர். அப்போது சபாநாயகர் பொறுப்பில் இருந்த நான்தான், அவர்களை டிஸ்மிஸ் செய்து ஆட்சியை காப்பாற்றி கொடுத்தேன். ஆனாலும் தற்போது கட்சிக்குள் எனக்கு மரியாதை இல்லை என கூறியுள்ளார்.
News April 2, 2026
BREAKING: புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமனை ECI மாற்றியுள்ளது. அவருக்கு பதிலாக புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். 1992-ம் ஆண்டு IPS அதிகாரியாக தேர்வான இவர், சென்னை காவல் ஆணையர், கோவையில் துணை ஆணையராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தமிழ்நாட்டை உலுக்கிய கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய அதிகாரியாகவும் இவர் செயல்பட்டார்.


