News October 23, 2025
டிரம்புக்கு பயந்த மோடி: ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

ஆசியான் மாநாட்டில் பங்கேற்கும் அதிபர் டிரம்ப்பை நேரில் சந்திப்பதை தவிர்க்கவே, PM மோடி மாநாட்டிற்கு செல்லவில்லை என்று காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். காஸா உச்சி மாநாட்டையும் டிரம்ப் வருகையாலே மோடி தவிர்த்ததாக குற்றம்சாட்டியுள்ள ஜெய்ராம் ரமேஷ், உலக தலைவர்களுடன் புகைப்படம் எடுத்து, தன்னை விஸ்வகுருவாக பிரகடனப்படுத்தும் வாய்ப்பை மோடி தவற விட்டுள்ளதாக கிண்டலடித்துள்ளார்.
Similar News
News October 23, 2025
உதகையில் இன்று புத்தகத் திருவிழா!

உதகையில் 2025ஆம் ஆண்டுக்கான புத்தகத் திருவிழா, உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இப் புத்தகத் திருவிழா இன்று (அக்டோபர் 24) தொடங்கி, நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணிக்குத் துவங்கும் இந்தக் கண்காட்சி இரவு 7 மணி வரை நடைபெறும். இந்தப் புத்தகக் கண்காட்சியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
News October 23, 2025
இரவில் உடல் உறுப்புகள் சிறப்பாக செயல்பட..

தூங்கும்போது உடல் உறுப்புகள், உடலை சுத்தம் செய்து நச்சுகளை நீக்குகிறது. ஆனால் இந்த செயல்முறைக்கு ஊட்டச்சத்துக்கள் தேவை. அவை எந்த உணவில் உள்ளன என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இவற்றை சாப்பிட்டு, இரவு நன்றாக தூங்குங்கள், காலை புத்துணர்ச்சியுடன் எழுந்திருங்கள். வேறு ஏதேனும் உணவு உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News October 23, 2025
கல்யாணம் பண்ண சிறந்த வயசு இதுதான்!

மிடில் கிளாஸ் வர்க்கத்தினர் அதிகம் வாழும் 18 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், திருமணம் செய்ய சராசரியாக 25.9 வயதே சரியானது என தெரியவந்துள்ளது. இதில், திருமணம் செய்ய அர்ஜென்டினா 28.9 வயதை குறிப்பிட்ட நிலையில், இந்தியர்கள் 22.7 வயதை குறிப்பிட்டுள்ளனர். மேலும், முதல் குழந்தையை பெற்றுக்கொள்ள சராசரியாக 26.1 வயதே சரியானது என்பதும் தெரியவந்துள்ளது. எந்த வயதில் திருமணம் செய்தால் வாழ்க்கை சிறக்கும்?