News April 22, 2025
மோடி சிறந்த தலைவர்: USA துணை அதிபர் புகழாரம்

PM மோடி சிறந்த தலைவர் என USA துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பாராட்டியுள்ளார். இந்தியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் வந்துள்ள ஜே.டி.வான்ஸை வரவேற்ற PM மோடி, அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார். இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் மோடி பதிவிட்டு இருந்தார். அதனை குறிப்பிட்டு, மோடியை சந்தித்தது கவுரவம் என்றும், அவர் சிறந்த தலைவர் எனவும் ஜே.டி.வான்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
Similar News
News April 22, 2025
காதல் தோல்வியால் பாதிரியார் ஆன போப் பிரான்சிஸ்..!

ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்ற இயற்பெயர் கொண்ட போப் ஆண்டவரின் இளமை கால காதல் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அமலியா டாமோன்டே என்பவருக்கு அவர் எழுதிய காதல் கடிதத்தில், ‘நான் உன்னை திருமணம் செய்யவில்லை என்றால் பாதிரியாராகி விடுவேன்’ என போப் குறிப்பிட்டிருந்துள்ளார். அந்த காதல் கைகூடாததால், 22 வயதில் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு சேவையாற்றத் தொடங்கிய அவர், போப் ஆண்டவராக மறைந்திருக்கிறார்.
News April 22, 2025
சூப்பர்ல.. வாட்சப்பில் புது அப்டேட்..!

மக்களே, வாட்சப்ல ஒரு சூப்பர் அப்டேட் வரப்போகுது. அதாவது, வாட்சப் மெசேஜை அங்கயே மொழி பெயர்க்கிற ஆப்சன் வரப்போகுதாம். இதுமூலமா, வேறவேற மொழி பேசுறவங்க கூட ஈசியா சாட் பண்ணிக்கலாம். மொழிபெயர்க்க வேறு ஆப் தேவை இல்லாததுனால உங்க வாட்சப் டேட்டா பாதுகாப்பா இருக்கும். ஆன்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் வாட்சப் யூஸ் பண்ணுறவங்களுக்கு இந்த அப்டேட் வந்துருச்சின்னு சொல்லப்படுது. இனி மொழி பிரச்னை இல்லப்பா!
News April 22, 2025
வீட்டு வாசலில் இந்த ‘3’ பொருட்களை வைக்காதீங்க..

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டு வாசலில் இந்த 3 பொருட்களை வைப்பது, கேடு விளைக்கும் என நம்பப்படுகிறது: ✦வாடிய செடிகள், கொடிகள் வீட்டு வாசலில் இருப்பது துரதிஷ்டத்தை உண்டாக்கும் ✦கருப்பு அல்லது அடர் நிறத்திலான பொருட்கள் (வாசப்படி மேட், சிலைகள்) இருப்பது அதிர்ஷ்டத்தைத் தடுக்கும் என நம்பப்படுகிறது ✦உடைந்த சேதமடைந்த பொருட்கள், ஓடாத கடிகாரங்கள் வாசலில் இருந்தால், எதிர்மறையான ஆற்றலை கொடுக்கும்.