News September 2, 2025
SCO மாநாடு ஒரு நாடகம்: புலம்பும் டிரம்பின் அசிஸ்டன்ட்

SCO மாநாட்டில் மோடி- புடின்- ஜீ ஜின்பிங் சந்திப்பு உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. இதை பார்த்து டிரம்ப்பும் அவரது அமைச்சர்களும் விமர்சனங்களை வீசுகின்றனர். அந்த வரிசையில் கருவூல அமைச்சர் ஸ்காட் பெசண்ட், SCO மாநாடு ஒரு நாடகம் என்றும், இந்தியாவும், சீனாவும் அதில் மோசமான நடிகர்கள் எனவும் சாடினார். ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவது, உக்ரைன் போரை தூண்டுவதற்கு சமம் என்றும் விமர்சித்துள்ளார்.
Similar News
News September 2, 2025
நீங்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள்!

ஒரு மனிதன் தன்னுடைய உடலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இவை. ஒரு ஆரோக்கியமான உடலில்,
*BP: 120/80 இருக்கணும்
*இதய துடிப்பு: 70-100
*உடலின் வெப்பநிலை: 36.4 ° C-37.2 ° C
*வைட்டமின் பி12: 200-900pg/ml.
*கொழுப்பு 130-200
*ஆக்சிஜன் ரேட்: சராசரியாக 95% – 100% *வைட்டமின் டி3: 20-50ng/ml *ஹீமோகுளோபின்: ஆண்கள் 13-18, பெண்கள் 11.50-16 கிராம்/deciliter SHARE IT.
News September 2, 2025
கர்ப்பத்தில் பாரசிட்டமால் எடுத்தால் குழந்தைக்கு ஆபத்தா?

கர்ப்பிணிகள் பாரசிட்டமால் மாத்திரையை அதிகமாக சாப்பிடுவது, குழந்தையின் நரம்பியல் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக மவுண்ட் சினாய் மற்றும் ஹார்வர்ட் பொது சுகாதாரப் பள்ளி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஆட்டிசம், ADHD போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம். எனவே, மருத்துவ ஆலோசனைப்படி தான் பாரசிட்டமால் மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கின்றனர்.
News September 2, 2025
₹189 ரீசார்ஜில் மாதம் முழுக்க பேசலாம்

சமீபத்தில் ஜியோ நிறுவனம் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணமான ₹249 திட்டத்தை நிறுத்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் பலரும் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது. நீங்கள் வேறு குறைவான ரீசார்ஜ் ப்ளான் தேடினால் ₹189 திட்டம் உங்களுக்கு உதவும். இதில் 28 நாள்களுக்கு எண்ணற்ற அழைப்புகள் வழங்கப்படுகின்றன. அதோடு மொத்தமாக 300 SMS அனுப்பலாம், 2GB நெட் பயன்படுத்திய பிறகு இணைய சேவை 64 Kbps-ல் தொடரும்.