News August 26, 2025
டிரம்ப்புக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த மோடி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் 50% வரிவிதிப்பை மறைமுகமாக குறிப்பிட்ட PM மோடி, எவ்வளவு அழுத்தம் வந்தாலும், சிறு தொழில்முனைவோர்கள், விவசாயிகளுக்கு தீங்கு ஏற்பட விடமாட்டோம் என மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் பேசிய அவர் உலகில், அனைவரும் பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்டு அரசியல் செய்வதில் மும்முரமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News August 26, 2025
மதுரை: மகளிர் உரிமைத் தொகை புகாரளிக்கலாம்

மதுரை மக்களே, வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் தகுதி வாய்ந்த மகளிர் தேர்வு செய்யப்பட்டு அரசு மூலம மாதம் தோறும் ரூ.1000 கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் தகுதி அல்லாதவர்கள் மகளிர் உரிமை தொகை பெற்றுக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்தால் <
News August 26, 2025
EB Bill எகிறுதா? குறைக்கும் வழிமுறைகள் இதோ!

உங்களுடைய EB Bill வழக்கமாக கட்டும் தொகையை விட அதிகமாக வருவதாக தோன்றுகிறதா? இவை காரணமாக இருக்கலாம் ▶8 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட மின்சாதன பொருள்களை தூக்கிவீசுங்கள் ▶பராமரிக்கப்படாத AC-ஆல் மின்கட்டணம் உயரலாம் ▶TV போன்ற சாதனங்கள் OFF-ல் இருக்கும்போதும் மின்சாரத்தை உறிஞ்சும். அதனால் அதனை Unplug செய்யுங்கள் ▶மின்சாரத்தை குறைவாக ஈர்க்கும் LED BULB-களை பயன்படுத்தலாம். SHARE IT.
News August 26, 2025
BREAKING: நகைக்கடன்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில், நகர கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடனுக்கு முன்னுரிமை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளின் உயிர் நாடியான பயிர் கடனை நகர கூட்டுறவு சங்கங்களில் நிறுத்தவும், வீட்டுக்கடன், நகைக்கடன், வணிகக் கடன்கள் வழங்க கவனம் செலுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிர் கடனை நிறுத்தினால், விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.