News July 1, 2024

மோடிக்கு முதுகெலும்பு இல்லை: ஆ.ராசா

image

பிரதமர் மோடிக்கு மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டதாக திமுக எம்.பி ஆ.ராசா மக்களவையில் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டிய அவர், எதிர்க்கட்சிகளின் எந்த குற்றச்சாட்டுக்கும் பதிலளிக்க மோடிக்கு முதுகெலும்பு இல்லை என்றார். அரசியலமைப்பை மாற்ற நினைத்த மோடி, தற்போது அதை வணங்குவதாகவும் விமர்சித்துள்ளார்.

Similar News

News November 18, 2025

ஈரானில் வேலையா? மத்திய அரசு எச்சரிக்கை

image

இந்தியர்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்கு பயணிக்கலாம் என்ற சலுகையை நிறுத்த ஈரான் அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை வரும் 22-ம் தேதி அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது. இதையடுத்து, அதிக சம்பளத்தில் வேலை, விசா தேவையில்லை என கூறும் ஏஜெண்ட்களை நம்ப வேண்டாம் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, ஆசை வார்த்தைகளை கூறி ஈரானில் இந்தியர்கள் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவையும் திமுகதான் காப்பாற்றணும்: மருது அழகுராஜ்

image

எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா வளர்த்த அதிமுக இப்போது இல்லை என மருது அழகுராஜ் கூறியுள்ளார். இப்போதிருக்கும் அதிமுக சில சமூகங்கள் சேர்ந்த சாதி அமைப்பாக மாறிவிட்டது என்ற அவர், சகோதர இயக்கமான அதிமுகவையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு வந்திருக்கிறது என தெரிவித்துள்ளார். இதனால்தான் அதிமுகவை விட்டு வந்துவிட்டோமே என்ற வருத்தம் தனக்கு துளியும் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.

error: Content is protected !!