News September 13, 2025
மணிப்பூர் மக்களை மோடி அவமதித்துவிட்டார்: கார்கே

மணிப்பூரில் மோடி செலவிடும் 3 மணி நேரம் மக்கள் மீதான கருணை அல்ல என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். 46 நாடுகளுக்கு பயணம் செய்த மோடிக்கு, சொந்த மக்களுக்கு அனுதாபத்தை தெரிவிக்க நேரமில்லை என குற்றம்சாட்டினார். கடைசியாக ஜனவரி 2022-ம் ஆண்டு தேர்தலுக்காக மட்டுமே மோடி மணிப்பூர் வந்ததாகவும், மோடியின் தற்போதைய பயணத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும் சாடியுள்ளார்.
Similar News
News September 13, 2025
வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?

வருமான வரிச் சட்டத்தின் கீழ் வீட்டில் தங்கம் வைத்திருக்க வரம்புகள் உள்ளன. *திருமணமான பெண்கள்: 500 கிராம் வரை தங்க நகைகள் வைத்துக் கொள்ளலாம். *திருமணமாகாத பெண்கள்: 250 கிராம் வரை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆண்கள்: 100 கிராம் மட்டுமே வைத்திருக்கலாம். வரம்பை மீறினால் அதற்கான ஆவணங்களை வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படலாம். SHARE IT.
News September 13, 2025
தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறையா?

தீபாவளி திங்களன்று(அக்.20) வருவதால், அடுத்த மாதத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை. இந்நிலையில், அக்.21 அன்றும் விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த காலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளித்து, அதனை ஈடுசெய்ய ஏதேனும் ஒரு சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படும். இந்த முறையும் அப்படி செய்தால் 4 நாள்கள் தொடர் விடுமுறை வரும். இதுகுறித்து அரசு விரைவில் தெரிவிக்க உள்ளது. SHARE IT.
News September 13, 2025
அதிமுக உடையாமல் பார்த்துக் கொள்ளுங்க EPS : கனிமொழி

கூட்டணி பற்றி பேசுவதற்கு முன்பு, EPS அவருடைய கட்சி உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி மறைமுகமாக சாடியுள்ளார். தற்போதைய சூழலில் கட்சியை பாதுகாப்பாதே அதிமுகவுக்கும், இபிஎஸ்-க்கும் நல்லது எனக் கூறிய அவர், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரையை விரைவில் தொடங்கவிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக திமுக கூட்டணியை EPS கடுமையாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.