News May 9, 2024

மக்களை மோடி மறந்துவிட்டார்

image

பிரதமர் பதவி கைவிட்டுப்போகும் என்ற பயத்தில் மோடி, பல்வேறு வித்தைகளை காட்டி வருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஜூன் 4ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறிய அவர், பிரதமரின் பொய் பரப்புரைகளை அடையாளம் கண்டு, மக்கள் மோடியை புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மோடி மக்களுக்காக உழைப்பதை மறந்துவிட்டு அதானிக்காக சேவை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

Similar News

News February 15, 2026

மகளிருக்கு ₹5,000.. அரசுக்கே பணம் ரிட்டன்!

image

மகளிருக்காக TN அரசு வழங்கிய ₹5,000 பணத்தை, இது ஓட்டுக்காக கொடுத்த பணம் எனக் கூறி ஒருவர் திருப்பி அனுப்பியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டி, தனது மனைவியின் ஒப்புதலுடன் CM-க்கு போஸ்ட் ஆபிஸ் மூலம் திருப்பி அனுப்பியுள்ளதாக கடிதம் எழுதியுள்ளார். இது, கடன் சுமையுடன் உள்ள திமுக அரசுக்கு என் பங்களிப்பாக இருக்கட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உங்கள் கருத்து?

News February 15, 2026

வங்கதேசத்தில் இருந்து PM மோடிக்கு வந்த அழைப்பு

image

வங்கதேச PM-ஆக தாரிக் ரஹ்மான் பிப்.17-ல் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், டாக்காவில் நடக்கவுள்ள இவ்விழாவில் பங்கேற்க PM மோடிக்கு அழைப்பு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா உள்பட சீனா, சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 13 நாடுகளுக்கு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார். கடைசியாக 2021-ல் PM மோடி வங்கதேசம் சென்றது குறிப்பிடத்தக்கது.

News February 15, 2026

மக்கள் திமுகவை மன்னிக்கவே மாட்டார்கள்: RB உதயகுமார்

image

திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இன்றைக்கு எத்தனையோ பேர் பணத்திற்காகவும், பதவிக்காகவும், வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகவும் அதிமுகவில் இருந்து ஓடிவிட்டார்கள். ஆனால் PM மோடியே, EPS தலைமையில்தான் இந்த தேர்தலை சந்திக்கிறார் எனவும், ₹5000 அல்ல, ஒட்டுமொத்த சொத்தை எழுதி கொடுத்தாலும் TN மக்கள் திமுகவை மன்னிக்க தயாராக இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!