News April 27, 2024

தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளார் மோடி

image

பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களுக்கு நிவாரண நிதி ஒதுக்கீட்டில் மோடி அரசு வஞ்சனை செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். 100 ஆண்டுகளில் இல்லாத புயல், வெள்ளத்தால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதை மத்திய அரசிடம் எடுத்துக்கூறியும் பலனில்லை என வேதனை தெரிவித்தார். மேலும், குஜராத்துக்கு ஆயிரம் கோடி நிதி கொடுத்த மோடி, தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளதாக அவர் சாடினார்.

Similar News

News November 18, 2025

Delhi Blast: மேலும் ஒருவர் கைது

image

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில், மேலும் ஒருவரை NIA கைது செய்துள்ளது. அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த ஜஸிர் பிலால் வாணி என்பவர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த பயங்கரவாதி உமர் நபியுடன் தொடர்புடையவர் என்று NIA கூறியுள்ளது. தாக்குதல் நடத்துவதற்கு உமர் நபியுடன் சேர்ந்து ஜஸிர் பிலால் வாணி சதி திட்டம் தீட்டியதாகவும் ராக்கெட், டிரோன்களை உருவாக்குவதற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவரானார் தேஜஸ்வி யாதவ்

image

பிஹார் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியாக இருக்க, மொத்தமுள்ள தொகுதிகளில் 10%-க்கு மேல் வெற்றிபெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், 243 தொகுதிகள் கொண்ட பிஹாரில், 143 தொகுதிகளில் போட்டியிட்டு 25 இடங்களில் RJD வெற்றிபெற்றிருந்தது.

error: Content is protected !!