News August 25, 2024

‘U’ டர்ன் அடிக்கும் மோடி அரசு: கார்கே

image

UPS திட்டத்தில் இருக்கும் ‘U’மத்திய அரசு, இதுவரை அடித்த ‘யு டர்ன்’களை குறிப்பிடுவதாக கார்கே கிண்டலடித்துள்ளார். வக்ஃபு மசோதா, லேட்டரல் என்ட்ரி, ஒளிபரப்பு மசோதா என மத்திய அரசு தனது முடிவில் இருந்து பின் வாங்குவதாக விமர்சித்த அவர், 140 கோடி இந்தியர்களை மோடி அரசிடம் இருந்து நிச்சயம் பாதுகாப்போம் என உறுதியளித்தார். ஜூன் 4 மக்களின் முடிவு, மோடி அரசின் அதிகார திமிரை வென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

Similar News

News January 22, 2026

செங்கோட்டையன் மீது விஜய் ஏமாற்றமா?

image

செங்கோட்டையன் மூலம் அதிமுகவின் சில EX தலைவர்கள் தவெகவில் இணைந்தாலும், கூட்டணி விவாகரத்தில் விஜய் ஏமாற்றமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக TTV தினகரனை கூட்டணியில் சேர்த்து களம் கண்டால் தென் மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை பெற முடியும் என தவெக திட்டமிட்டது. ஆனால், அவர் மீண்டும் NDA-வில் ஐக்கியமாகிவிட்டார். இதனால், கூட்டணி வியூகத்தை மாற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News January 22, 2026

பிரபல பாடகி ஜானகியின் மகன் காலமானார்

image

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகனான முரளி கிருஷ்ணா (65) காலமானார். பரதநாட்டிய கலைஞரான இவர், ’விநாயகுடு’, ‘மல்லேபுவ்வு’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவு எஸ்.ஜானகி உள்பட அவரது குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்பு சகோதரரின் மறைவு மிகுந்த வருத்தம் அளிப்பதாக பாடகி சித்ரா உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News January 22, 2026

மோடிக்கு அடுத்த இடத்தில் கம்பீர்: சசி தரூர்

image

இந்திய அணி தோற்கும் போதெல்லாம் கம்பீர் கடுமையாக விமர்சிக்கப்படும் நிலையில் கம்பீருக்கு ஆதரவாக சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இந்தியாவில் மோடிக்கு பின் கடினமான வேலையை செய்பவர் கவுதம் கம்பீர்தான் என்றும், அவரின் திறமையான தலைமைக்கு தனது பாராட்டுக்கள் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த கம்பீர், உண்மை ஒருநாள் அனைவருக்கும் புரியும் என பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!