News June 17, 2024
ரயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்: ராகுல்

மேற்குவங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இவ்விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக கூறிய அவர், மோடி அரசின் அலட்சியம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் என்றும் உறுதி தெரிவித்தார். மோடி அரசின் நிர்வாக அலட்சியமே கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்துகள் அதிகரித்ததற்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News September 13, 2025
இந்தியாவை வெல்ல முடியும்: பாக்., கேப்டன் சூசகம்

ஆசிய கோப்பை தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் IND vs PAK போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாக்., கேப்டன் சல்மான் அலி அகா, இதேபோல் திட்டமிட்டப்படி தொடர்ந்து செயல்பட்டால் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என மறைமுகமாக இந்தியாவை குறிப்பிட்டுள்ளார். இதனால், இப்போட்டி மேலும் கவனம் ஈர்த்துள்ளது. பஹல்காம் தாக்குதலை கருத்தில்கொண்டு, இப்போட்டியை ரத்து செய்ய சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
News September 13, 2025
திமுகவுக்கு 13 மார்க்: அன்புமணி ரேட்டிங்

550 வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, வெறும் 66 வாக்குறுதிகளை மட்டுமே திமுக நிறைவேற்றியுள்ளதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இதை கணக்கில் கொண்டால், அதற்கு வெறும் 13 மார்க் தான் என்ற அவர், இதனால் திமுக அரசு ஃபெயில் ஆகிவிட்டதாகவும் சாடியுள்ளார். முன்னதாக, அன்புமணி வெளியிட்டிருந்த ‘விடியல் எங்கே’ புத்தகத்தில் வேலைவாய்ப்புகள், மாதந்தோறும் மின் கணக்கீடு போன்றவை நிறைவேற்றப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
News September 13, 2025
19 பள்ளி மாணவர்கள் மரணம்

மியான்மரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 19 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் ராணுவத்திற்கும், ஆயுதக் குழுவான அரக்கன் ஆர்மி (AA)-க்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. மேற்கு ராக்கைன் மாகாணத்தில் தனியார் பள்ளி மீது ஆயுதக் குழு நடத்திய வான்வழி தாக்குதலில் 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், இது மிருகத்தனமான தாக்குதல் என்று ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.