News November 18, 2024
அதானி, அம்பானிக்கானது மோடி அரசு: பிரியங்கா
கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய அரசியலின் திசை மாறிவிட்டதாக பிரியங்கா கூறியுள்ளார். மக்களுக்கான ஆட்சி என்பது இல்லாமல் போய்விட்டதாக குறைகூறிய அவர், மக்களை பிளவுப்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறவே பாஜக விரும்புவதாகவும் குற்றஞ்சாட்டினார். விமான நிலையம், துறைமுகம் என நாட்டின் பெரும்பாலான சொத்துகள் அதானி, அம்பானி வசமே உள்ளதாகவும், இருவருக்காகவே மோடி உழைப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News November 20, 2024
CHANAKYA: ஜார்கண்டில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்
ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து CHANAKYA STRATEGIES நடத்திய வாக்குக் கணிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதில், பாஜக கூட்டணி 45 முதல் 50 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேமந்த் சோரனின் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி 35 முதல் 38 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 20, 2024
CHANAKYA: மராட்டியத்தில் பாஜக கூட்டணி வெல்லும் என கணிப்பு
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து CHANAKYA STRATEGIES நடத்திய EXIT POLLS விவரம் வெளியாகியுள்ளது. அதில் பாஜக, சிவசேனா கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 152 முதல் 160 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், உத்தவ் கட்சி கூட்டணி 130 முதல் 138 தொகுதிகளில் வெற்றி பெறும். பிற கட்சிகள் 6 முதல் 8 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 20, 2024
ABP: ஜார்கண்டில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்
மேட்ரிஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பை ஏபிபி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி பாஜக தலைமையிலான கூட்டணி 45% வாக்குகளுக்கு மேல் பெற்று 42 முதல் 47 தொகுதிகளை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 38 சதவீத வாக்குகளை பெற்று 25 முதல் 30 தொகுதிகளை வெல்லக்கூடும். மற்ற கட்சிகள் 17% வாக்குகள் வரை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.