News May 2, 2024

மோடி அரசு இடஒதுக்கீட்டை ரகசியமாகப் பறித்தது

image

BSNL, BHEL போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ஏறத்தாழ 6 லட்சம் நிரந்தரப் பணியிடங்களை பாஜக அரசு நீக்கியிருப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “மோடி அரசின் ‘தனியார்மயமாக்கல்’ நாட்டின் வளங்களை நேரடியாகவும், இடஒதுக்கீட்டை ரகசியமாகவும் பறித்து வருகிறது. ஒப்பந்த அடிப்படையில், பணியாட்களை நியமித்துப் பின்வாசல் வழியாகப் பணியிடங்களை ஒழித்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 1, 2026

மிகப்பெரிய பரிசு.. அதிமுக கையிலெடுத்த யுக்தி

image

வாக்காளர்கள விடுங்க, நிர்வாகிகளுக்கு முதல்ல பரிசு மழையை கொட்டுவோம் என்று கட்சிகள் முடிவெடுத்துவிட்டன போல. கோவையில் அதிக வாக்குகளைப் பெறும் வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய பரிசு உண்டு என அடித்துச் சொல்லியிருக்கிறார் SP வேலுமணி. முன்னதாக, செங்கல்பட்டு அதிமுக நிர்வாகியும், அதிக வாக்குகளைப் பெறும் நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம், புல்லெட் என <<19514069>>அறிவித்திருந்தார்<<>>. உங்கள் கருத்து?

News April 1, 2026

காங்., வேட்பாளர் பட்டியலில் பணம் விளையாடியதா?

image

காங்கிரஸ் வேட்பாளர் சீட்டை அக்கட்சி நிர்வாகிகள் ₹5 கோடிக்கு விற்றுள்ளதாக வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் அனலாய் தகிக்கிறது. பணம் பெற்று தயாரிக்கப்பட்ட அந்த வேட்பாளர் பட்டியல் ராகுல் காந்தி கைக்கு சென்றுள்ளதாம். அப்போது ஜோதிமணி, பிரவீன் என பலர் அவரிடம் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடியது தெரிந்ததும் கோபத்தில் அவர் லிஸ்டை கிழித்து எரிந்திருக்கிறார் என்கின்றனர்.

News April 1, 2026

BREAKING: திமுகவுக்கு பெரிய ஷாக் கொடுத்த வைகோ

image

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளிலும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டி என வைகோ சற்றுமுன் அறிவித்துள்ளார். சீர்காழி(தனி) தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டி என ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், திடீரென தனது முடிவை மாற்றியுள்ளார். இதனால், அந்தத் தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே களமிறங்க உள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!