News May 27, 2024
பெரும் முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்யும் மோடி அரசு

அதானி போன்ற பெரும் முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்யும் மோடி அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பணமில்லை என பொய் கூறுகிறது என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். சம்பாவில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “மத்திய பாஜக அரசு, கோடீஸ்வரர்களை இலக்காகக் கொண்டே கொள்கைகளை வகுக்கின்றது. இந்த அரசியலின் விளைவால்தான் அக்னிவீர் திட்டம், வேளாண் திருத்தச் சட்டங்கள் போன்றவை உருவாக்கப்பட்டன” என்றார்.
Similar News
News April 4, 2026
சர்ச்சை ஆடியோ.. ஆ.ராசா Vs மாரிதாஸ்

ஆ.ராசா MP பேசியதாக யூடியூபர் மாரிதாஸ் வெளியிட்ட <<19548289>>ஆடியோ<<>> அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதை பிரசாரத்தில் சுட்டிக்காட்டி பேசிய EPS, கருணாநிதியை ஸ்டாலின் கைதி போல நடத்தியிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து போலியான ஆடியோவை வெளியிட்டதற்கு மாரிதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆ.ராசா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், ஆதாரம் இருப்பதால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என மாரிதாஸ் பதிலளித்துள்ளார்.
News April 4, 2026
காங்., வேட்பாளர் பட்டியல்.. ஜோதிமணி புலம்பல்

கட்சிக்காக உழைத்தவர்களை விடுத்து, புதியவர்களுக்கு சீட் தரப்பட்டுள்ளதாக ஜோதிமணி கூறியுள்ளார். வேட்பாளர் பட்டியலில் கொங்கு வெள்ளாள கவுண்டர் & அருந்ததியினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும், 2 பெண்களுக்கு மட்டுமே சீட் தந்திருப்பது காங்.,-ன் சமூகநீதி கோட்பாட்டுக்கு எதிரானது என அவர் X-ல் பதிவிட்டுள்ளார். TN-ன் எதிர்காலத்தை கருதி, இதுபற்றி வாக்குப்பதிவு பிறகு விரிவாக பேசுவேன் என கூறியுள்ளார்.
News April 4, 2026
இன்றைய நல்ல நேரம்

ஏப்ரல் 4, பங்குனி 21 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:30 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: துவிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்


