News April 4, 2025
நாட்டை படுகுழியில் தள்ளும் மோடி அரசு: சோனியா சாடல்

வக்ஃப் திருத்த மசோதா அரசியலமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதல் என சோனியா காந்தி விமர்சித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதா வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இது சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற பாஜகவின் சதி எனவும் அவர் சாடியுள்ளார். கல்வி, சிவில் உரிமைகள் என எதுவானாலும், மோடி அரசு நாட்டைப் படுகுழியில் தள்ளுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News April 11, 2025
23 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இரவு 1 மணி வரை இடி – மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கோவை, திருப்பூர், கரூர், தி.மலை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், தென்காசி.
இரவு 1 மணி வரை இடி- மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி.
News April 11, 2025
‘கவுரவ்’ கிளைட் பாம்: இந்திய ராணுவத்துக்கு புதிய வரவு

நீண்ட தூரம் சென்று தாக்கும் கிளைடு வெடிகுண்டு ‘கௌரவ்’-ஐ இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதித்துள்ளது. கடந்த ஏப்.8 – 10ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், போர் விமானத்தில் இருந்து வீசப்பட்ட வெடிகுண்டு, 100 கி.மீ தொலைவில் இருந்த இலக்குகளை துல்லியமாக தாக்கியுள்ளது. 1000 கிலோ எடை கொண்ட இந்த கௌரவ் வெடிகுண்டு, முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
News April 11, 2025
10ம் வகுப்பு தமிழ் விடைத்தாள்: தமிழாசிரியரே திருத்த உத்தரவு

10ம் வகுப்புத் தேர்வு தமிழ் விடைத்தாளை தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர் மட்டுமே திருத்த வேண்டுமென்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், அரசு தேர்வுகள் இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தமிழ் விடைத்தாளை தமிழாசிரியரும், ஆங்கில விடைத்தாளை ஆங்கிலத்தில் போதிக்கும் ஆசிரியருமே திருத்தும் விதியை பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.