News April 11, 2024
60 ஆண்டுகளில் செய்ததை 10 ஆண்டில் செய்தார் மோடி

காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளில் செய்த பணிகளை 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தை 80 முறை காங்கிரஸ் உடைத்து உள்ளதாகவும், இதுபெரிய பாவம் என்றும் விமர்சித்தார். சாதி, மதம், மொழி அடிப்படையில் யாரும் உயர்வானவர் இல்லை, தகுதியே ஒருவரை உயர்வானராக்குகிறது என்றும் கட்கரி குறிப்பிட்டார்.
Similar News
News April 25, 2025
போருக்கு தயாராகும் பாகிஸ்தான்!

இந்திய எல்லையில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையை பாக். ராணுவம் அதிகரித்து வருகிறது. பதுங்கு குழியில் இருந்து மட்டுமே கண்காணிக்கவும், ராவல்பிண்டியில் உள்ள 10 படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் தீவிர உஷார் நிலையில் இருக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய எல்லை பகுதி மட்டுமில்லாமல், சர்வதேச எல்லைகளான சியால்கோட், குஜ்ரன்வாலா பகுதிகளிலும் வீரர்களை அதிகரித்து வருகிறது.
News April 25, 2025
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்..!

▶ உண்மையான போருக்கு எதிரான ஒரு போரை தொடங்க வேண்டுமென்றால், அதனை குழந்தைகளிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். ▶ வன்முறையை விரும்பும் மனிதர்கள் பிற வன்முறையாளர்களால் கொல்லப்படுவதில்லை. அவர்களின் கொள்கையால்தான் கொல்லப்படுகிறார்கள். ▶ அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவிப்பவர்களுக்கு மதம் பற்றி ஒன்றும் தெரியாது.
News April 25, 2025
பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிய RR?

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணியும் கட்டாயமாக 8 போட்டிகளில் வெல்ல வேண்டும். ஆனால், RR அணி 9 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வென்றுள்ளது. இதனால், எஞ்சிய 5 போட்டிகளில் வென்றாலும் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கடினம்தான். ஒருவேளை மற்ற அணிகளின் ரன்ரேட் குறைவாக இருந்தால் ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அதுவும் ரொம்ப ரொம்ப கஷ்டமே.