News December 13, 2024
குகேஷுக்கு மோடி வாழ்த்து

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில், இது குகேஷின் ஈடு இணையற்ற திறமை, கடின உழைப்பு, தளராத உறுதிக்கு கிடைத்த முடிவு இது எனக் கூறியுள்ளார். அவரது வெற்றி, சதுரங்க வரலாற்றில் அவரது பெயரை பொறித்தது மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான இளம் மனங்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 14, 2025
CM தலைமையில் இன்று கூடும் அமைச்சரவை

CM ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. மேலும், ஆணவ படுகொலையை தடுப்பதற்கான புதிய சட்டங்கள் கொண்டுவருவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகள் செல்ல உள்ளதால் அது பற்றியும் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
News August 14, 2025
துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தின கொண்டாட்டம்: 3 பேர் பலி

இன்று பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி லியாரி உள்ளிட்ட பல இடங்களில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியுள்ளனர். இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 64 பேர் படுகாயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே பலுசிஸ்தான் படை – பாக்., ராணுவம் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
News August 14, 2025
இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ் லிஸ்ட்

இந்த வாரம் மரண மாஸான படங்கள் திரைக்கு வந்துள்ளன. லோகேஷ் – ரஜினியின் ‘கூலி’, ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் NTR-ன் ‘வார் 2’ ஆகிய படங்கள் இன்று தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளன.
*JSK – Janaki V vs State of Kerala: Zee5
*Earth (English): Jio Hotstar
*Constable Kanakam (Telugu): etv WIN
*Tehran (Hindi): Zee5
*Dog Man (English): Jio Hotstar