News September 22, 2025

விஜய் பின்புலத்தில் மோடி, அமித்ஷா: அப்பாவு

image

மத்திய அரசே சிலரை கட்சி தொடங்க வைத்து, திமுக ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க பார்க்கிறது என்று சபாநாயகர் அப்பாவு குற்றஞ்சாட்டியுள்ளார். பின்புலத்தில் மோடி, அமித்ஷா இருக்கும் தைரியத்தில்தான், அரசியல் அடிச்சுவடே தெரியாமல், சினிமாவில் பேசுவதுபோல் அகந்தையோடு விஜய் பேசுகிறார் என்று சாடிய அவர், இனியாவது அரசியல் கட்சித் தலைவராக கண்ணியத்துடன் பேசுவது அவருக்கு நல்லது என்றும் தெரிவித்தார்.

Similar News

News September 22, 2025

அண்ணாமலை – டிடிவி சந்திப்பு: மீண்டும் கூட்டணியா?

image

NDA கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி-ஐ அண்ணாமலை திடீரென சந்தித்து பேசியுள்ளார். EPS-ஐ CM வேட்பாளராக ஏற்க மறுத்து கூட்டணியில் இருந்து டிடிவி விலகிய நிலையில், தமிழக நலனுக்காக அவரை சந்திப்பேன் என அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில், நேற்றிரவு இருவரும் சந்தித்து 1:30 மணி நேரம் ஆலோசித்ததாகவும், அப்போது டிடிவி-ஐ மீண்டும் கூட்டணியில் இணையுமாறு அண்ணாமலை வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

News September 22, 2025

₹31,000 சம்பளம்.. மத்திய அரசில் வேலை

image

மத்திய அரசின் ECIL நிறுவனத்தில் காலியாகவுள்ள 160 டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் இப்பணிக்கு B.E., B.Tech., படித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 – 30. சம்பளம்: ₹25,000 – ₹31,000. இதற்கு இன்றே விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால், உடனடியாக இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பியுங்கள். நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News September 22, 2025

சாகச பயணம் செய்ய ஆசையா?

image

சாகச சுற்றுலா செல்ல விரும்புவோரின் பயணத்தை சிறப்பாக மாற்றுவதே அவர்கள் செல்லும் பாதைதான். அதிலும் குறிப்பாக வளைந்து நெளிந்து செல்லும் zig zag சாலை பயணம், சுற்றுலாவின் த்ரில்லை அதிகப்படுத்தும். இந்த zig zag சாலை எங்கெல்லாம் உள்ளது என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்க பயணிக்க விரும்பும் சாலை எது? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!