News April 21, 2024
பாஜகவின் பிரதமராகவே மோடி செயல்படுகிறார்

பாஜகவின் பிரதமராகவே மோடி செயல்படுவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். மோடியின் பேச்சுகள் இந்திய அரசிலமைப்புக்கு கட்டுப்பட்டு அனைவருக்குமானது போல தெரியவில்லை. பாஜகவின் கொள்கைகளை, கோட்பாடுகளை செயல்படுத்த விரும்பும் ஒரு நபரின் பேச்சாகவே அமைந்துள்ளது. அவர் இந்திய பிரதமர் என்ற நிலை மாறி பாஜகவின் பிரதமர் என்ற நிலையில் செயல்படுவதாக சரத்பவார் தெரிவித்தார்.
Similar News
News August 23, 2025
விஜய்யை பூமர் என கலாய்த்த அண்ணாமலை

‘அங்கிள்’ என ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் பேசியிருப்பது சரியில்லை என்றும், விஜய்யை ‘பூமர்’ மாதிரி பேசுகிறீர்கள் என்று யாராவது சொன்னால் அவரது மனது கஷ்டப்படாதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லையில் பாஜக பூத் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணியை வெற்றிப் பெற செய்து, EPS-யை CM ஆக்கும் பொறுப்பு நமக்கு இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.
News August 23, 2025
என்னிடம் கற்றதை விஜய் சொல்கிறார்: சீமான்

TVK மாநாட்டில் விஜய் விதை நெல் கதை கூறினார். இக்கதையை சீமான் 2021 தேர்தலின் போது தெரிவித்ததாகவும், <<17483040>>அதனை விஜய் காப்பியடித்தாகவும் விமர்சனங்கள் எழுந்தன.<<>> இதுபற்றி பேட்டியளித்த சீமான், கதையாக இருந்தாலும், முதலில் கூறியது நான் என்றும், இளவரசன் கதையாக தான் கூறியதை, தளபதி கதையாக விஜய் சொல்லிவுள்ளதாகவும் தெரிவித்தார். அண்ணனிடம் கற்றதை தம்பி சொல்கிறார். நானும் எங்கேயே கற்றதுதானே, அதில் தவறில்லை என்றார்.
News August 23, 2025
காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

நீண்ட நேரம் இரவில் உணவு இல்லாமல் இருந்த உடல், காலை உணவின் மூலம் புதிய சக்தி பெறுகிறது. ஆதலால் தான் காலை உணவு முக்கியமென மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியமான காலை உணவு உடலுக்கு தேவையான புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஆகிய சத்துக்களை வழங்குகிறது. அதே சமயம் தேவையற்ற காலை உணவும் உடலை கெடுக்கிறது. அவை என்னென்ன என்பதை மேலே கொடுத்துள்ளோம். அதனை Swipe செய்து பார்க்கவும்.