News June 9, 2024
மோடி 3.0: அமைச்சரவை உத்தேசப் பட்டியல் (1/3)

NDA கூட்டணி பிரதமராக மோடி 3ஆவது முறையாக இன்று பதவியேற்கவுள்ளார். அவரது அமைச்சரவையில், பாஜக மூத்த தலைவர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மன்சுக் மாண்டவியா, மேக்வால், அஷ்வினி வைஷ்ணவ், பண்டி சஞ்சய், கிஷன் ரெட்டி, ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பாஜக எம்.பி.,க்களின் பெயர்களும் உத்தேசப் பட்டியலில் உள்ளது.
Similar News
News November 11, 2025
பிஹாரில் இன்று 2-ம் கட்ட தேர்தல்

பிஹாரில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, அம்மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் 20 மாவட்டங்களில் மொத்தம் 45,399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
News November 11, 2025
International Roundup: அமெரிக்க அரசு முடக்கத்திற்கு தீர்வு

*அமெரிக்க அரசு முடக்கம் இந்த வார இறுதிக்குள் சீராகும் என எதிர்பார்ப்பு. *சிரிய அதிபர் அகமது அல் ஷாரா – அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை. *பிலிப்பைன்ஸை தாக்கிய Fung-wong புயலால் 4 பேர் பலி. *காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலி. *ஊழல் வழக்கில் சிறையில் இருந்த ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி விடுவிப்பு. *ஈராக்கில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
News November 11, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 11, ஐப்பசி 25 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சப்தமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: கேட்டை ▶சிறப்பு: சக்தி நாயனார் குருபூஜை, செவ்வாய் வழிபாட்டு நாள். ▶வழிபாடு: நவக்கிரகத்தில் உள்ள செவ்வாய் பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.


