News December 19, 2024

மிதமான மழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடகடலோர தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல, நாளை முதல் 4 நாள்களுக்கு தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Similar News

News September 6, 2025

இது Old Monk-இன் கதை

image

ஐரோப்பிய துறவிகளால்(Monk) இன்ஸ்பையராகி 1954-ல் வேத் ரத்தன், ஓல்ட் மாங்க்-ஐ தொடங்கினார். சீக்ரெட் ஸ்பைசஸ் கலந்து 7 ஆண்டுகள் ஓக் மரப் பீப்பாயில் ஊறவைத்த டார்க் ரம், மதுபிரியர்களை ரொம்பவே கவர்ந்தது. 1970-ல் ரத்தன் மறைந்துவிட, சகோதரர் பிரிகேடியர் கபில் மோகன் பொறுப்பேற்றார். அதன்பின் விளம்பரம் இல்லாமலேயே பிரபலமான ஓல்ட் மாங்க், இன்று 22 நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்தியாவின் பிரபல பிராண்டாக உள்ளது.

News September 6, 2025

தீபாவளிக்கு டபுள் போனஸ்.. அரசின் இன்ப அதிர்ச்சி

image

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA(அகவிலைப்படி) உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளியையொட்டி, 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தி DA வழங்கப்படும் என ஏற்கெனவே மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், ஜூலை மாதத்தில் இருந்து 3% உயர்வை கணக்கிட்டு அக்டோபர் சம்பளத்தில் 3 மாத DA நிலுவைத் தொகை சேர்த்து வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

News September 6, 2025

விஜய்யின் சுற்றுப்பயணத்தை தடுக்க அரசு முயற்சி: தவெக

image

விஜய்யின் சுற்றுப்பயணத்தை தடுக்க போலீஸ் மூலம் அரசு நெருக்கடி கொடுப்பதாக தவெகவின் ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டியுள்ளார். எந்த தலைவரும் மக்களை சந்திப்பதை, எப்பேர்ப்பட்ட அதிகார சக்தியாலும் தடுக்க முடியாது எனவும், அப்படி தடுக்க நினைத்தவர்களை மக்களே தூக்கி எறிந்த வரலாறு உண்டு என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், மக்களே திமுக அரசின் அதிகாரத்திற்கு முடிவுரை எழுதுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!