News April 11, 2024

மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர்கிறது

image

தேர்தலுக்கு பிறகு ரீசார்ஜ் கட்டணத்தை 15 – 17% உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. இந்தியாவில் தற்போது ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளன. அதே நேரம் பிஎஸ்என்எல் என்ற பொதுத்துறை நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ரீசார்ஜ் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 3, 2026

LSG ஓனருக்கு தடை விதிக்க வேண்டும்: லலித் மோடி

image

DC-யிடம் நேற்று முன்தினம் LSG அணி தோல்வியடைந்ததால் அதன் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் கடுமையாக நடந்து கொண்டார். KL ராகுல் கேப்டனாக இருந்த போதும், இதேபோல் மைதானத்தில் அவர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டது சர்ச்சையானது. இதை சுட்டிக்காட்டி, அவர் ஒரு கோமாளி என விமர்சித்த IPL EX தலைவர் லலித் மோடி, அவரை IPL-ல் இருந்தே நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News April 3, 2026

அண்ணாமலை, சரத்குமார் ஆதரவாளர்களுக்கு சீட் மறுப்பு

image

தி.மலையில் அஸ்வத்தாமனுக்கும், தளி தொகுதியில் அண்ணாமலையின் ஆதரவாளரான அமர் பிரசாத் ரெட்டிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என பேசப்பட்டது. ஆனால், இருவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிருப்தியில் இருந்த சரத்குமாரின் ஆதரவாளர்கள் யாருக்கும் சீட் கிடைக்கவில்லை. மூத்த தலைவரான வி.பி.துரைசாமிக்கு பதில், அவரது மகன் பிரேம்குமார் ராசிபுரம் தொகுதி வேட்பாளராக களமிறங்குகிறார்.<<-se>>#TNElection2026<<>>

News April 3, 2026

புதிய கருத்துக் கணிப்பு.. அதிமுக, விஜய்க்கு அதிர்ச்சி

image

தமிழக தேர்தலுக்கான LOK POLL கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், திமுக கூட்டணி 181 – 189 இடங்களில் (வாக்குகள் 40%) வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 29% வாக்குகளுடன் 38 – 42 இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றும் என்றும், 24% வாக்குகளுடன் தவெக 8 – 10 இடங்களில் வெல்லும் எனவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உங்க கருத்து?

error: Content is protected !!