News February 13, 2025

மொபைல் ப்ரீபெய்டு கட்டணம் மீண்டும் உயருகிறது?

image

ஜியோ, ஏர்டெல், வோடாபோன் இந்தியா ஆகியவை கடந்த ஜூலை மாதம் ப்ரீபெய்டு, போஸ்ட் பெய்டு கட்டணங்களை கணிசமாக உயர்த்தின. இந்த நிலையில், வோடாபோன் இந்தியா நிறுவனம் தற்போது அதிக செலவீனத்தை சமாளிக்கவும், தரமான சேவை அளிக்கவும் கட்டணத்தை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளது. ஒரு நிறுவனம் கட்டணம் உயர்த்தினால், மற்றவையும் அதை பின்பற்றும்.

Similar News

News February 14, 2025

சங்பரிவார் ஸ்டாலின்… ஜெயக்குமார் பாய்ச்சல்

image

CM ஸ்டாலினை, சங்பரிவார் ஸ்டாலின் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் ‘தொடரும் சாதியக் கொடுமைகள், தூங்கும் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், இன்னும் எத்தனை சாதியக் கொடுமைகளை எத்தனை வடிவங்களில் TN சந்திக்க போகிறது. கூட்டணிக் கட்சிகளின் வாய்களை கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே முழு முயற்சி எடுக்கிறார் சங்பரிவார் ஸ்டாலின் என சாடியுள்ளார்.

News February 14, 2025

சீமான் மீதான விஜயலட்சுமி வழக்கு: பிப்.19இல் தீர்ப்பு

image

சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக கடந்த 2011ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த பாலியல் வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரித்து வந்த நிலையில், இதை ரத்து செய்யக்கோரி சீமான் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை வரும் 19ஆம் தேதி விசாரித்து அன்றைய தினமே தீர்ப்பு அளிக்கப்படும் என சென்னை ஐகோர்ட் இன்று அறிவித்தது.

News February 14, 2025

ராசி பலன்கள் (14.02.2025)

image

மேஷம் – செலவு
ரிஷபம் – போட்டி
மிதுனம் – சினம்
கடகம் – வெற்றி
சிம்மம் – கவலை
கன்னி – ஆக்கம்
துலாம் – ஓய்வு
விருச்சிகம் – உற்சாகம்
தனுசு – நன்மை, மகரம் – உழைப்பு
கும்பம் – மேன்மை, மீனம் – கடன்தீரல்.

error: Content is protected !!