News August 3, 2024
நெல்லையில் மாநில அளவிலான செஸ் போட்டி தொடக்கம்

ஏழு வயது பிரிவுக்குட்பட்ட மாநில அளவிலான செஸ் போட்டி பாளை வ.உ.சி உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து இன்று(ஆக.03) நடைபெற்றது.இந்த போட்டியினை பாளை எம்எல்ஏ அப்துல் வஹாப் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் வீரர்கள் செப்டம்பர் மாதம் மைசூரில் நடைபெறும் தேசியப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
Similar News
News October 27, 2025
நெல்லையப்பர் கோயில் கந்த சஷ்டி விழா 5ஆம் நாள் பூஜை

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில் தற்போது ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐந்தாம் திருநாளில் இன்று சுவாமி ஆறுமுகர் மற்றும் வள்ளி தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
News October 27, 2025
திருநெல்வேலி மாவட்டத்தில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் நாளை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. தங்கள் வார்டு பகுதியில் எப்போது நடைபெறுகிறது என்பதை அந்த பகுதி கவுன்சிலரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தங்கள் பகுதியில் முன்னுரிமை அடிப்படையில் செய்ய வேண்டிய பணி குறித்து தெரிவிக்கலாம்.
News October 26, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.26] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சுரேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.


