News March 14, 2025
எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை

மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லாவுக்கு சென்னை ஐகோர்ட் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. 1997இல் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக ₹1.5 கோடி நிவாரண நிதி பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
Similar News
News March 3, 2026
ஆற்காடு எம்.எல்.ஏ மீண்டும் விருப்ப மனு

ராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், ஆற்காடு தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஜே.எல். ஈஸ்வரப்பன், 2026 தேர்தலில் மீண்டும் ஆற்காடு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது விருப்பமனுவைத் தாக்கல் செய்தார். இவர் 2021 தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 3, 2026
BREAKING: மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்

திமுகவில் OPS இணைந்ததால், அவரின் ஆதரவாளர்கள் பலர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில், OPS-ன் வலது கை போல் செயல்பட்டு வந்த மார்க்கையன்கோட்டை முன்னாள் சேர்மன் அகிலன், பெரியகுளம் நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் தங்களை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர். மேலும், தங்களின் வீடுகளில் இருந்த OPS புகைப்படத்தை அகற்றிவிட்டு, EPS-ன் புகைப்படத்தையும் வைத்துள்ளனர்.
News March 3, 2026
இந்தியாவின் டாப் 5 பணக்கார கோயில்கள்!

இந்தியாவில் துட்டு கொட்டோ கொட்டு’னு கொட்டும் கோயில் திருப்பதி என அனைவரும் அறிவோம். ஆனால், திருப்பதியை போலவே நாட்டின் பணக்கார கோயில்கள் லிஸ்ட் உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அந்த லிஸ்ட்டை பார்க்கவும். இவற்றில் எந்தெந்த கோயில்களில் நீங்க தரிசனம் செஞ்சிருக்கீங்க?


