News October 27, 2025
MLA வீட்டில் மரணம்.. உதயநிதி கண்ணீர் அஞ்சலி

திமுக துணை அமைப்புச் செயலாளரும், சென்னை திருவிக நகர் தொகுதி MLA-வுமான தாயகம் கவியின் தாயார் சௌந்தரி அம்மையார் வயது மூப்பால் இன்று காலமானார். மேற்கு மாம்பலம் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு DCM உதயநிதி அஞ்சலி செலுத்தினார். மேலும், குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், திமுக நிர்வாகிகள், MLA-க்களும் சௌந்தரி அம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். RIP
Similar News
News October 28, 2025
பிஹார் SIR-க்கே இன்னும் விடை கிடைக்கவில்லை: காங்கிரஸ்

பிஹாரில் SIR மேற்கொள்ளபட்டபோது எழுந்த கேள்விகளுக்கே ECI-யிடம் இருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை என காங்., தெரிவித்துள்ளது. முந்தைய காலங்களில் SIR நடக்கும் போது புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, தேவையில்லாதவர்கள் நீக்கப்பட்டனர். ஆனால் பிஹாரில் ஒருவரை கூட புதிதாக சேர்க்காமல், 65 லட்சம் பேரை நீக்கியுள்ளனர். இந்த சூழலில்தான் 12 மாநிலங்களில் SIR நடத்தப்பட உள்ளதாகவும் அக்கட்சி சாடியுள்ளது.
News October 28, 2025
Cinema Roundup: ₹55 கோடி வசூலித்த ‘பைசன்’

*வரும் நவ.4-ம் தேதி முதல் ‘பேட் கேர்ள்’ படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. *துருவ் விக்ரமின் ‘பைசன்’ 10 நாள்களில் ₹55 கோடி வசூலித்துள்ளதாக தகவல். *சமந்தா நடிக்கும் புதிய படத்திற்கு ‘மா இண்டி பங்காரம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. *ஜித்து மாதவன் இயக்கும் படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். *விஜய் ஆண்டனியின் ‘சக்தி திருமகன்’ படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.
News October 28, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க


