News April 29, 2025
3-வது குழந்தைக்கு சலுகை வேண்டும்: MLA கோரிக்கை

3-வது குழந்தை பெற்றுக் கொள்ள அரசு சலுகை வழங்க வேண்டும் என திமுக பர்கூர் MLA மதியழகன் கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொகை குறைவதால் தொகுதி மறுசீரமைப்பின் போது பிரச்னை எழும் என சுட்டிக் காட்டி இந்த கோரிக்கையை அவர் சட்டமன்றத்தில் வைத்துள்ளார். ஏற்கனவே தொகுதி மறுசீரமைப்புக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை கவனம் பெற்றுள்ளது.
Similar News
News September 14, 2025
அனைத்து டாஸ்மாக் கடைகளிலும்.. ரூல்ஸ் மாறுகிறது

ஐகோர்ட் உத்தரவின்படி நவ.30-ம் தேதிக்குள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறையை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. நீலகிரி, வேலூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அமலில் உள்ள இத்திட்டத்திற்கு மதுப்பிரியர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளதாக தெரிகிறது. இதனால், மற்ற மாவட்டங்களில் சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
News September 14, 2025
இதெல்லாம் கொள்கையற்ற கூட்டத்திற்கு தெரியாது: CM

திமுகவின் நல்லாட்சியால் எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் பேசிய அவர், திமுக அரசின் சாதனைகள் என்பது கொள்கையற்ற கூட்டத்திற்கு தெரியாது என தெரிவித்தார். மேலும், நீட் விலக்கை கொண்டுவர முடியவில்லை என்ற குற்றச்சாட்டை தாங்கள் மறுக்கவில்லை என்ற அவர், அதற்கான முழு முயற்சியும் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
News September 14, 2025
கும்கி 2-ல் அர்ஜுன் தாஸ் வில்லன்?

13 ஆண்டுகளுக்கு பிறகு ‘கும்கி’ என்ற சூப்பர் ஹிட் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது. பிரபு சாலமன் இயக்கும் இப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில், அவர் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், மதி, ஸ்ரீதா ராவ் ஆகிய புதுமுகங்களே கதையின் நாயகர்களாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.