News November 6, 2025
MLA மீது தாக்குதலா?

பிஹாரின் பரசட்டி பகுதியில் மர்ம நபர்கள் தனது கார் மீது கல்லெறிந்து தாக்கியதாக MLA-வும், NDA வேட்பாளருமான ஜோதி மாஞ்சி குற்றம்சாட்டினார். இதனால் காயமடைந்ததாக அவர் போலீஸில் புகாரளிக்க, விசாரணையும் தொடங்கியது. ஆனால், தாக்குதல் நடந்ததற்கான தடையமே இல்லை என போலீஸ் கூறியுள்ளனர். பாஜக இவ்விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 25, 2026
விசிகவில் 20 பேர் மட்டுமே உள்ளனர்: ஆதவ் அர்ஜுனா

21 கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் விஜய்யை எதிர்க்க திமுக அஞ்சுவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், பெரியார், அம்பேத்கர் கொள்கையை பேசும் திமுக, இருவரது சிலைகளை அண்ணா அறிவாலயத்தில் ஏன் வைக்கவில்லை என கேள்வி எழுப்பினார். இது குறித்து திருமாவளவன் பேச தயங்குவதாகவும், விசிகவில் தற்போது 20 பேர் மட்டுமே உள்ளனர்; மற்றவர்கள் திமுகவில் உள்ளனர் என சாடினார்.
News January 25, 2026
தவெக ஆட்சி உறுதி: முடிவை அறிவித்தார் விஜய்

எத்தனை பேர் சேர்ந்து நம்மை எதிர்க்க வந்தாலும், தனியாக வரும் நம்மை தமிழக மக்கள் தேர்வு செய்யத் தயாராகிவிட்டதாக விஜய் தெரிவித்துள்ளார். தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், விசில் சின்னத்தை ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் எனவும் தவெக ஆட்சி அமைவது உறுதி என்றும் கூறினார். இதன் மூலம் தவெக தனித்து களம் காணத் தயாராகி விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
News January 25, 2026
10-வது தேர்ச்சி போதும்.. ₹53,330 சம்பளம்!

*ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 18-25 *கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு. மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் *சம்பளம்: ₹24,250 – ₹53,330 வரை *தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு & மொழித்திறன் தேர்வு*பிப்ரவரி 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *ஆன்லைனில் விண்ணப்பிக்க <


