News September 27, 2025
இளநீரில் இதை கலந்தால் ஊட்டச்சத்து இரட்டிப்பாகும்!

உடலுக்கு ஆரோக்கியமான இளநீருடன், இந்த 5 பொருள்களை கலந்து குடித்தால் ஊட்டச்சத்து இரட்டிப்பாகும். * இளநீரில் சியா விதைகளை கலந்தால் செரிமானம் சிறப்பாக இருக்கும் *தேன் சேர்த்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் * புதினா கலந்தால் புத்துணர்ச்சி அதிகரிக்கும் *எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் உடலில் PH அளவு சமநிலைப்படும்* கருப்பு உப்பை சேர்த்து குடித்து வந்தால் செரிமான கோளாறு சரியாகும்.
Similar News
News September 27, 2025
இன்று முதல் விடுமுறை..

காலாண்டு தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்றுமுதல் மாணவர்களுக்கு விடுமுறை தொடங்குகிறது. அனைத்து பள்ளிகளும் அக்.5 வரை 9 நாள்கள் மாணவர்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். காலாண்டு விடுமுறை நாள்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதை மீறி, சிறப்பு வகுப்புகள் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
News September 27, 2025
இன்று விஜய் பேசப்போவது என்ன?

இன்று நாமக்கல், கரூரில் விஜய் மக்கள் சந்திப்பை நடத்தவிருக்கிறார். தனது பரப்புரையின்போது, அந்தந்த மாவட்டங்களின் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விஜய் பேசுவது வழக்கம். அந்த வகையில், தற்போது அரசியலில் பரபரப்பாக பேசப்படும் கிட்னி திருட்டு விவகாரம் குறித்து நாமக்கல்லிலும், கரூரில் செந்தில் பாலாஜியை மையமாக வைத்தும் விஜய்யின் பேச்சு இருக்கும் என சொல்லப்படுகிறது.
News September 27, 2025
ஆஸ்துமா பிரச்னைக்கு இந்த மூலிகை தேநீரை குடிங்க!

சளி, இருமல், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் கல்யாண முருங்கை இலை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ➥கல்யாண முருங்கை இலைகளை கழுவி, சிறு சிறு பொடியாக நறுக்கவும் ➥தண்ணீரில் இவை, 3- 5 நிமிடங்கள் வரை நன்கு கொதித்த பிறகு, வடிகட்டி கொள்ளவும் ➥சுவைக்காக சிறிதளவு வெல்லம் சேர்த்தால், சுவையான கல்யாண முருங்கை தேநீர் ரெடி. SHARE IT.