News August 11, 2024
தங்க நகைகளுக்கு மாற்றாக கலக்கும் நகைகள்

தங்கம், வெள்ளி நகைகளுக்கு மாற்றாக White Gold (தங்கம், நிக்கல், பல்லாடியம் அல்லது Zinc கலந்தது), Rose Gold (தங்கம், தாமிரம் கலந்தது) ஆகிய நகைகளை பெண்கள் தற்போது அணியத் தொடங்கியுள்ளனர். மேலும் Green Gold (தங்கம், வெள்ளி, தாமிரம்), Block Silver (ஆக்சிடைஸ் செய்த வெள்ளி), Argentium Silver (ஜெர்மானியம் சேர்ந்த வெள்ளி) ஆகிய நகைகள் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
Similar News
News August 26, 2025
கேப்டன்சி வாய்ப்பை நழுவ விட்ட ஸ்ரேயாஸ் ஐயர்

ஆசிய கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், துலீப் டிராபியில் மேற்கு மண்டல அணியின் பேப்டன்சி வாய்ப்பை ஸ்ரேயாஸ் ஐயர் நிராகரித்தாக கூறப்படுகிறது. ஸ்ரேயாஸ் வாய்ப்பை ஏற்காததால் அந்த வாய்ப்பு ஷர்துல் தாக்கூருக்கு சென்றது. ஆசிய கோப்பை கனவு தகர்ந்ததால் இப்போது சாதரண வீரராக துலீப் டிராபியில் அவர் விளையாட உள்ளார். போராட்ட குணம் கொண்ட ஸ்ரேயாஸ் மீண்டும் டி20 அணியில் நிச்சயம் இணைவார் என நம்பலாம்.
News August 26, 2025
சனாதன தர்மத்தை அழிக்க முடியாது: வானதி சீனிவாசன்

சனாதன தர்மத்தை எந்த அரசியல் தலைவர்களும் அழிக்க முடியாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ராமர் குறித்து வன்னி அரசு பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் முதலில் உண்மையான ராமாயணத்தை படிக்க வேண்டும் எனவும் வானதி பதிலடி கொடுத்துள்ளார். கட்டுக்கதைகளை வைத்து பேசுவது சரியானதல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
News August 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: குற்றங்கடிதல்
குறள் எண்: 439
குறள்:
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
பொருள்: எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது.