News April 29, 2025

மைனாரிட்டி அரசு… மீண்டும் பிரதமரான மார்க் கார்னி

image

கனடா நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் மார்க் கார்னி பிரதமரானார். மொத்தமுள்ள 343 தொகுதிகளில் 168 இடங்களில் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 172 இடங்கள் லிபரல் கட்சிக்கு கிடைக்கவில்லை என்றாலும் தற்போது அவர்கள் ஆட்சி அமைக்கின்றனர்.

Similar News

News November 7, 2025

டாப் 10 மாவட்டங்கள்.. கெத்து காட்டும் தமிழ்நாடு

image

ஒவ்வொரு மாநிலமும் இந்திய நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, ஏற்றுமதி மூலம் உலக சந்தையில் சில மாவட்டங்கள் சிறந்து விளங்குகின்றன. இந்தியாவில் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 70%-க்கும் மேற்பட்டவை சில மாவட்டங்களிலிருந்து வருகிறது. அவை எந்தெந்த மாவட்டங்கள் என்று, மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.

News November 7, 2025

CM ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: தமிழிசை

image

கோவை மாணவி வழக்கை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால் CM ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும், பெண்கள் ஆயுதம் எடுக்கும் சூழல் தமிழகத்திற்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். குற்றவாளிகள் எல்லாம் திமுகவுடன் தொடர்புடையவர்களாக இருப்பதால், போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் சாடியுள்ளார்.

News November 6, 2025

அரைஞாண் கயிறு கட்டுவதில் இப்படி ஒரு சிக்கலா?

image

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரைஞாண் கயிறு கட்டுவது நம்முடைய பாரம்பரிய வழக்கம். அதில் பல நன்மைகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு சில பாதிப்புகளையும் அது ஏற்படுத்துமாம். அரைஞாண் கயிறை வருஷக் கணக்கில் இடுப்பில் கட்டுவதால் அதில் அழுக்குகள் கிருமிகள் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதனால் நூல் கயிறை தவிர்த்து வெள்ளியில் அணிவது நல்லது என தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!