News February 25, 2025
டீ பார்ட்டிகளுக்கு ரூ.1 கோடி செலவிட்ட அமைச்சர்கள்

புதுச்சேரி மாநில அமைச்சர்கள், அரசுப் பணத்தில் செலவிட்டது குறித்து தகவல் அறியும் சமூக செயல்பாட்டாளர் அசோக் ராஜா என்பவர் RTI மூலம் தகவல் பெற்றுள்ளார். அதில் 4 ஆண்டுகளில் டீ பார்ட்டிகளுக்காக ரூ.1 கோடிக்கு மேல் அமைச்சர்கள் செலவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, அமைச்சர்கள் ரூ.41 லட்சத்துக்கு டீ, காபி குடித்து இருப்பதாகவும், ரூ.61 லட்சத்துக்கு பூங்கொத்து வாங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 27, 2026
திண்டுக்கல்: காரில் ஆண் சடலம் மீட்பு!

செட்டிநாயக்கன்பட்டி சபரி மஹால் அருகே கார் பட்டறை நடத்தி வந்த உசேன் என்பவர், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நேற்று காலை 11 மணி முதல் அவர் சடலமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த தாடிக்கொம்பு காவல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 27, 2026
PCOD, PCOS பிரச்னைகளுக்கு எளிய தீர்வு!

90% பெண்களுக்கு PCOD, PCOS போன்ற மாதவிடாய் பிரச்னைகள் இருக்கிறது. இதை ஆரம்பத்திலேயே சரி செய்ய, கைவைத்தியம் இருக்கிறது. கருப்பட்டி, பெருங்காயம், பூண்டை சம அளவு எடுத்து இடித்து, அதை நெல்லிக்காய் அளவுக்கு உருண்டை பிடித்து சாப்பிட வேண்டும். 1 மாதத்திற்கு காலையில் சாப்பிட்டு வர PCOS சரியாகும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். இதோடு உடற்பயிற்சி செய்வதும், சத்தான உணவுகளை உட்கொள்வதும் அவசியம். SHARE.
News March 27, 2026
BREAKING: தனித்து போட்டி.. இரவில் அறிவித்தார்

70 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் 12 – 15 சீட் வரை கேட்டோம்; 7 தொகுதிகளை கூறச் சொன்னார்கள் என்ற அவர், EPS உடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்றார். அதிமுக புறக்கணித்ததை எண்ணி தேவேந்திர குல மக்கள் வேதனை அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் ராஜ்யசபா சீட்டையும் கேட்டிருந்தார்.


