News March 3, 2025
அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை.. ஒருவன் கைது

மத்திய இணை அமைச்சர் ரக்ஷாவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். மகாராஷ்டிராவில் நடந்த சிவராத்திரி விழாவின் போது இச்சம்பவம் நடந்தது. ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டதாகவும், அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில CM பட்னவிஸ் உறுதியளித்துள்ளார். அரசியல் ரீதியாக இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
Similar News
News March 3, 2025
5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: IMD

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 2- 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. இன்று முதல் 7ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல,
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும் என்றும் IMD கணித்துள்ளது.
News March 3, 2025
முன்பு திமுக, தற்போது தவெக.. PKவின் பிளான் பலிக்குமா?

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிக்காக பிரசாந்த் கிஷோரின் (PK) குழு பணிபுரிந்ததாக கூறப்படுவதுண்டு. ஆனால் இதை 2 தரப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக சொன்னதில்லை. இந்நிலையில், 2026ம் ஆண்டு தேர்தலில் விஜய்யின் தவெக கட்சிக்காக களமிறங்கியுள்ளது PK குழு. முந்தையத் தேர்தலில் PKவின் திட்டம் வென்ற நிலையில், 2026 தேர்தலில் மீண்டும் பலிக்குமா? இல்லையா? என்பது மக்கள் கையிலேயே உள்ளது.
News March 3, 2025
அதிமுக அறிவித்த பம்பர் பரிசு!

அதிமுகவின் கூட்டத்திற்கு வருவோருக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊத்துக்குளியில் வரும் 5ஆம் தேதி மாலை ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கூட்டத்திற்கு வருவோரில் 3 பேருக்கு தங்கம், 300 பேருக்கு மிக்சி, குக்கர், ஃபேன் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?