News August 14, 2025
அமைச்சரா? உதயநிதி ரசிகர் மன்ற தலைவரா? இபிஎஸ்

தமிழகத்தில் 207 அரசுப்பள்ளிகளை மூடுவது திமுகவினரின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள், தனியார் நடத்தும் பள்ளிகளை வாழவைப்பதற்கான நடவடிக்கை என இபிஎஸ் விமர்சித்துள்ளார். இப்பள்ளிகளை மூடுவதன் மூலம் அது இயங்கிய இடங்கள் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி என கல்வியாளர்கள் குற்றம் சுமத்துவதாகவும் தெரிவித்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் போல் செயல்படுவது வெட்கக்கேடானது என்றார்.
Similar News
News August 14, 2025
உங்களை நீங்களே ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்து பாருங்க!`

இலக்கை அடைய முடியாமல், எங்கு எதனால் தோற்கிறோம் என தவிப்பவர்கள் தான் அதிகம். அப்படியானவர் நீங்கள் என்றால், உங்களை நீங்களே ‘போஸ்ட் மார்ட்டம்’ பண்ணிக்கோங்க. நம் எங்கு தவறு செய்தோம் என யாராலும் சொல்ல முடியாது. நாமளே புரிந்து கொண்டால்தான் உண்டு. அதற்கு, உங்களை நீங்களே போஸ்ட் மார்ட்டம் செய்து பாருங்க, தவறு என்ன என்பது புரியும். தவறை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது, அதனை ஒப்புக்கொள்ளுங்கள்.
News August 14, 2025
இந்தியர்கள் சிறுநீர் கழித்தாலே. BJP தலைவர் கிண்டல்

சிந்து நதி நீரை நிறுத்தினால் இந்தியாவிற்கு தக்க பாடம் புகட்டப்படும் என்று பாக்., PM ஷெபாஸ் ஷெரிஃப் கூறியிருந்தார். இந்நிலையில், 140 கோடி இந்தியர்களும் சிறுநீர் கழிக்கும் வகையில் ஒரு அணையைக் கட்டி, அதைத் திறந்தாலே பாக்.,கில் சுனாமி ஏற்பட்டுவிடும் என BJP தலைவர் மிதுன் சக்கரவர்த்தி ஆவேசமாக கூறியுள்ளார். பாக்., மக்களிடம் தனக்கு எந்த விரோதமும் இல்லை என்ற அவர், இதை பூட்டோவுக்காக சொன்னது என்றார்.
News August 14, 2025
ஆசிய கோப்பை 2025: 5 வீரர்களுக்கு வாய்ப்பு குறைவு

ஆசிய கோப்பை 2025 டி20 தொடர் செப்டம்பரில் நடைபெறவுள்ளது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக வழிநடத்துவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், IPL 2025-ல் ஜொலித்த 5 வீரர்கள் அணியில் தேர்வாவதற்கான வாய்ப்பு குறைவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. சாய் சுதர்சன் (GT), ஷ்ரேயஸ் ஐயர் (PBKS), பிரசித் கிருஷ்ணா (GT), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (RR), க்ருணால் பாண்ட்யா (RCB) ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.