News June 30, 2024
உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர்: அண்ணாமலை

டாஸ்மாக் மதுபானம் தரமானதாக இல்லை, `கிக் இல்லை’ என அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான். அதனால் தான், சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை நாடுகின்றனர் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும், சென்னையை பொறுத்தவரை சுகாதாரம் என்பது அதலபாதாளத்தில் தான் உள்ளது. உதாரணமாக ’ஸ்வச் பாரத்தில்’ 44வது இடத்தில் இருந்த சென்னை, தற்போது 200வது இடத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என குற்றஞ்சாட்டினார்.
Similar News
News September 20, 2025
BREAKING: விஜய் கூட்டத்திற்குள் புகுந்தது ஆம்புலன்ஸ்

நாகையில் தவெக தலைவர் விஜய் சற்றுநேரத்தில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார். அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தபோது, கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் புகுந்துள்ளது. உடனே அக்கட்சியின் தொண்டர்கள், ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டனர். இதேபோல் ஏற்கனெவே, விஜய் தனது முதல் பரப்புரையை திருச்சியில் மேற்கொண்டபோதும், கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் புகுந்தது குறிப்பிடத்தக்கது.
News September 20, 2025
அமைப்பின் பெயரை மாற்ற ஜெய்ஷ்-இ-முகமது திட்டமா?

பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது தனது பாகிஸ்தான் பிரிவு பெயரை ’அல் முராபிதூன்’ என மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது என்ற பெயர் தடை செய்யப்பட்டுள்ளதால் நிதி திரட்டுவது கடினமாக இருக்கிறதாம். இதனால், பெயரை மாற்றி e-wallet, UPI போன்ற டிஜிட்டல் வழிகளில் நிதி திரட்டி, 4 பில்லியன் பாக்., ரூபாய் சேகரித்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News September 20, 2025
ரேஷன் பொருள் வாங்கும்போது இத Try பண்ணுங்க..

மக்களே, ரேஷன் கார்டு இல்லாமலேயே பொருள்கள் வாங்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? Mera Ration 2.0 செயலி மூலமாக இது சாத்தியமே. இதற்கு, செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடுங்கள். இதில் காட்டும் டிஜிட்டல் ரேஷன் கார்டை வைத்து பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். பேரிடர் காலங்களில் ரேஷன் கார்டை தொலைத்துவிட்டால், இதை செய்யுங்கள். இந்த முக்கிய தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணலாமே.