News August 6, 2025
கட்டணமின்றி அறுபடை வீடுகளுக்கு பயணம்: அமைச்சர்

முருகனின் அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லாமல் தரிசனம் செய்ய 2000 மூத்த குடிமக்களை அழைத்து செல்லயிருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இப்பயணம் மேற்கொள்பவர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60-70 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் உள்ளிட்ட சில விதிகள் உள்ளன. இதற்கான விண்ணப்பத்தை செப்.15-க்குள் சமர்ப்பிக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 11, 2025
உடல் எடை குறைப்பிற்கான சந்தையான இந்தியா?

இந்தியாவில் Wegovy, Mounjaro ஆகிய 2 உடல் எடை குறைப்பு ஊசிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், கடந்த மார்ச் இறுதியில் விற்பனைக்கு வந்த Mounjaro, 4 மாதங்களிலேயே ₹100 கோடி, ஜூலையில் மட்டும் ₹47 கோடி அளவிற்கு விற்பனையாகியுள்ளது. அதேபோல், ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வந்த Wegovy, 2 மாதங்களில் ₹10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் உடல் எடை குறைப்பு சந்தையின் மதிப்பை இவை காட்டுகின்றன.
News August 11, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 424 ▶குறள்: எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. ▶பொருள்: நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.
News August 11, 2025
இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும்: நிதின் கட்கரி

அமெரிக்கா வளர்ந்த நாடு என்பதால் வரி என்ற பெயரில் மற்ற நாடுகளை மிரட்டுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியா இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் எனவும், நாம் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வளர்ந்த நாடாக மாறினால் நாம் யாரையும் மிரட்டமாட்டோம், ஏனெனில் அதையே நமது கலாச்சாரம் கற்றுக் கொடுக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.