News September 3, 2025
10% கமிஷன் வாங்கும் அமைச்சர்: இபிஎஸ் அட்டாக்

எங்கு பத்திரப்பதிவு நடந்தாலும் அமைச்சர் மூர்த்தி 10% கமிஷன் வாங்குவதாக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தில் EPS பேசியுள்ளார். பத்திரப் பதிவுத் துறையில் கொள்ளையோ கொள்ளை நடைபெறுகிறது என மக்கள் பேசுவதாக கூறிய அவர், அமைச்சருக்கு கமிஷன் கொடுக்காவிட்டால் சொத்தை பதிவு செய்ய முடியாது எனவும் அந்தளவு அவல ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News September 3, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கி நகரும் ரிங்கு சிங்

IPL-ல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்குள் நுழைந்தவர் ரிங்கு சிங். இந்திய அணிக்கு சிறந்த பினிஷராகவும் சில போட்டிகளில் திகழ்ந்தார். அதிரடிதான் ரிங்குவின் பாணி என பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், தனக்கு டெஸ்டில் விளையாடுவதே கனவு என தெரிவித்துள்ளார். ரஞ்சியில் சிறப்பாக விளையாடிவரும் ரிங்கு, டெஸ்டில் வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
News September 3, 2025
சற்றுமுன்: உண்மையை போட்டு உடைத்தார் செங்கோட்டையன்

இபிஎஸ் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையனை முக்கிய தலைவர்கள் சந்தித்து நேற்று சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால், செங்கோட்டையன் எதற்கும் பிடிகொடுக்காமல் பதிலளித்து அனுப்பி இருக்கிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, இபிஎஸ் தரப்பில் யாரும் பேசினார்களா என்ற கேள்விக்கு, ‘நான் யாரையும் அழைக்கவில்லை, அவர்களாகவே வந்தார்கள்’ என்று உண்மையை போட்டு உடைத்துள்ளார்.
News September 3, 2025
GST பிரச்னை: எதிர்க்கட்சி நிதியமைச்சர்கள் ஆலோசனை

GST வரிவிதிப்பில் மாற்றம் கொண்டுவரப் போவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், இன்று GST கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில நிதியமைச்சர் ஆலோசனை கூட்டம் ஒன்று தமிழ்நாடு இல்லத்தில் நடந்தது. GST வரி விகிதங்களை குறைப்பதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை, மத்திய அரசு ஈடுசெய்ய வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலாக உள்ளது. செவி சாய்ப்பாரா நிதியமைச்சர்?