News August 10, 2024
ராமர் குறித்த அமைச்சர் ரகுபதி கருத்து: RS பாரதி விளக்கம்

ராமர் குறித்து அமைச்சர் ரகுபதி சொன்னதை சிலர் திரித்து சொல்வதாக திமுக அமைப்பு செயலாளர் RS பாரதி கூறியுள்ளார். “திராவிட மாடலின் முன்னோடி ராமர்” என ரகுபதி பேசியது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு RS பாரதி, தமிழ்நாட்டில் நல்ல ராஜ்யம் நடக்கிறது என்பதை ரகுபதி அப்படி சொல்லியிருப்பார் என்று பதிலளித்தாா். ராம ராஜ்யம் குறித்த ஆராய்ச்சிக்குள் சென்றால் தேவை இல்லாத சிக்கல் எழும் என்றும் அவர் கூறினார்.
Similar News
News December 5, 2025
பாக்.,ல் இந்து கோயில்களின் நிலைமை இதுதான்

பாகிஸ்தானில் உள்ள 1,871 கோயில்களில் 37 மட்டுமே இயங்குவதாக அந்நாட்டு பார்லி., குழு முன் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சொத்து மீட்புக் குழு (ETPB) கோயில்களை முறையாக பராமரிக்க தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இக்குழுவின் தலைமைப் பதவியை முஸ்லிம் அல்லாத நபர் ஒருவருக்கு வழங்கவேண்டும் என அங்குள்ள சிறுபான்மையினர் கோரிக்கை வைக்கின்றனர்.
News December 5, 2025
சற்றுமுன்: விஜய்யை சந்தித்தார் அடுத்த முக்கிய தலைவர்

சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில், விஜய்யை காங்., மூத்த நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்துள்ளார். ராகுல் காந்திக்கு நெருக்கமானவரான <<18458010>>பிரவீன்<<>>, சமீபத்தில் தவெகவை புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதில், கூட்டணி தொடர்பாக பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது. தவெக – காங்., கூட்டணி அமையுமா?
News December 5, 2025
புடினை இந்த காரில் PM கூட்டி சென்றது ஏன்? DECODES

Range Rover, Mercedes போன்ற காஸ்ட்லியான கார்கள் இருக்கையில் புடினை, PM மோடி Fortuner-ல் அழைத்து சென்றுள்ளார். Range Rover UK உடையது, benz ஜெர்மனி உடையது. உக்ரைன் போரை கண்டித்து இவ்விரு நாடுகளும் ரஷ்யா மீது அதிக வரிகளை விதித்துள்ளன. எனவேதான் PM அந்த கார்களை தேர்ந்தெடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிகழ்வு இந்தியா-ரஷ்யா இடையிலான நட்புறவையும், வெளியுறவு கொள்கையையும் வெளிகாட்டுவதாக பேசப்படுகிறது.


