News August 7, 2025
EPS-யிடம் நற்சான்றிதழை எதிர்பார்க்கவில்லை: அமைச்சர்

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19%. பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இந்த வளர்ச்சியை எட்டவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சியானது CM ஸ்டாலினின் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார். மேலும் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என EPS சான்றிதழ் தரவேண்டுமென எதிர்பார்க்கவில்லை எனவும், திருப்பூர் SSI படுகொலையை காட்டிலும் மிக மோசமான சம்பவங்கள் வடமாநிலங்களில் நடைபெறுவதாகவும் கூறினார்.
Similar News
News August 7, 2025
ஆரஞ்ச் அலர்ட்.. நாளை கவனமா இருங்க!

தமிழகத்தில் மழை குறைந்த நிலையில், நாளை மீண்டும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், தி.மலை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாம். அதனால், நாளை வெளியே செல்லும்போது கவனம் தேவை மக்களே!
News August 7, 2025
USA வரியால் நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்

டிரம்ப் விதித்த 50% வரியால், நாமக்கல்லில் சுமார் 20 கோடி முட்டைகள் தேங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி பேசிய முட்டை வியாபாரிகள் சங்க தலைவர் சுப்பிரமணியன், கடந்த ஜூன் மாதத்தில் 1.20 கோடி முட்டைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து சாதனை செய்த நிலையில், தற்போது நிலைமை தலைகீழாகியுள்ளது என்றார். வரி குறித்து மறுபரிசீலனை செய்ய டிரம்ப்பிடம் PM மோடி கோரிக்கை வைக்க வேண்டும் என்றார்.
News August 7, 2025
₹3,500 கோடி ஊழல் வழக்கில் சிக்கிய நடிகை தமன்னா?

ஆந்திராவில் ₹3,500 கோடி மதுபான ஊழல் வழக்கின் விசாரணை வளையத்திற்குள் நடிகை தமன்னா சிக்கியுள்ளார். ஜெகன்மோகன் ஆட்சியில் நடந்த இந்த மோசடியில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், தமன்னாவுக்கு தொடர்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. மோசடி பணத்தில் அவரது ‛ஒயிட் அண்ட் கோல்டு’ கம்பெனி 300 கிலோ தங்கம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.