News April 25, 2025
போப் ஆண்டவர் உடலுக்கு அமைச்சர் நாசர் அஞ்சலி

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், வாடிகனில் நாளை போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்குகள் நடக்கும் நிலையில், நாளைய தினம் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்றும், அரசு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News April 26, 2025
IPL: அட்டகாசமான சாதனை படைத்த ஷமி..!

ஐபிஎல் தொடரில் SRH வீரர் முகமது ஷமி புதிய சாதனை படைத்துள்ளார். CSK அணிக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலேயே ஷேக் ரஷீத்தை அவர் அவுட்டாக்கினார். தான் வீசிய முதல் பந்திலேயே அதிக முறை விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஷமி(4) முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து, உமேஷ் யாதவ், போல்ட், பிரவீன் குமார், மலிங்கா, புவனேஷ்குமார், டின்டா ஆகியோர் 3 முறை முதல் பந்தில் விக்கெட் எடுத்துள்ளனர்.
News April 26, 2025
அதிகமாக டீ, காபி குடிப்பீங்களா… கவனியுங்க!

‘லைட்டா தலை வலிக்குது.. வா டீ குடிப்போம்’ என சொல்லாத ஆட்களே கம்மிதான். ஒரு நாளைக்கு 3-5 கப் டீ அல்லது காபி குடிப்பது ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், ஒரு அபாய எச்சரிக்கையும் கொடுக்கிறார்கள். அதாவது, ஒரு நாளைக்கு 400 மி.கி. அளவுக்கு அதிகமாக caffeine எடுத்துக்கொண்டால், அது நாளடைவில் அமைதியின்மை, தூக்கமின்மையை அதிகரிக்குமாம். நீங்க டெய்லி எத்தனை கப் குடிப்பீங்க?
News April 26, 2025
மாதம் ரூ.1,000 உதவித் தாெகை பெறும் 9.19 லட்சம் மாணவர்கள்

அரசு பள்ளிகளில் 6-12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்விகளில் சேரும் மாணவிகளுக்காக புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்காக தமிழ் புதல்வன் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. இதன்கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதில் எத்தனை மாணவிகள், மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்ற விவரத்தை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் 4,93,689 மாணவிகள், 4,25,346 மாணவர்கள் பயனடைவதாக கூறப்பட்டுள்ளது.