News March 27, 2024
அமைச்சர் கே.என்.நேருவுக்கு திடீர் உடல் நலக்குறைவு

பெரம்பலூர் அருகே தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது அமைச்சர் கே.என். நேருவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கொசூர் பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது மயக்கம் வருவதாகக் கூறிய அவர், பிரசாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். பின்னர் வேறு ஒரு காரில் மருத்துவமனைக்கு கே.என். நேரு புறப்பட்டு சென்றார்.
Similar News
News March 24, 2026
மத்திய அரசின் மகளிர் இட ஒதுக்கீடு முடிவுக்கு CM ஆதரவு!

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் பார்லிமெண்டிலும், சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக செய்திகள் வெளியாகின. 4 பெரிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றதேர்தலை மனதில் வைத்தே இது செய்யப்படுவதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். எனினும் திமுகவின் கொள்கை வாரிசாக இந்த முடிவை எந்த நிபந்தனைகளுமின்றி ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News March 24, 2026
CSK அணியில் இணைந்த ஆஸி. வீரர்

காயம் காரணமாக IPL தொடரில் இருந்து CSK அணி வீரர் நேதன் எல்லிஸ் விலகியிருந்தார். இந்நிலையில், அவருக்கு மாற்றாக மற்றொரு ஆஸி. வேகப்பந்து வீச்சாளரான ஸ்பென்சர் ஜான்சனை CSK ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கெனவே IPL-ல் கொல்கத்தா, குஜராத் ஆகிய அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்காக மொத்தம் 8 டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இவரது தேர்வு பற்றி உங்கள் கருத்து?
News March 24, 2026
BREAKING: தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். திமுக ஒதுக்க முன்வந்த தொகுதிகளின் எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு செய்த பரிந்துரையும் மநீம உறுப்பினர்களுக்கு ஏற்புடையதாக இல்லை என அவர் கூறியுள்ளார். எனினும், திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக, TN & புதுச்சேரியில் போட்டியிட டார்ச் லைட் சின்னத்தை மநீம பெற்றிருந்தது.


