News May 7, 2025
AI-ல் மினிஸ்டர்.. ஏமாந்த காங்., நிர்வாகி

AI என்று தெரியாமல் நிர்மலா சீதாராமன் என நம்பி ₹33 லட்சத்தை காங்., நிர்வாகி இழந்துள்ளார். குன்னூரை சேர்ந்த லாரன்ஸுக்கு FB-ல் நிர்மலா சீதாராமன் பேசுவது போன்ற ஒரு லிங்க் வந்துள்ளது. உள்ளே சென்றவர் லட்சங்களில் டிரேட் செய்துள்ளார். நல்ல லாபமும் கிடைத்துள்ளது. ஒருகட்டத்தில் ரசீது கேட்டதும் எதிரில் இருப்பவர் ஆஃப் ஆகவே, ஏமாந்ததை தெரிந்து போலீஸுக்கு சென்றுள்ளார். ஆன்லைன் வர்த்தகர்கள் ஜாக்கிரதை!
Similar News
News December 5, 2025
நீதித்துறையின் செயல் வெட்கக்கேடானது: சீமான்

மதுரையை இன்னொரு அயோத்தியாக மாற்றும் சூழ்ச்சிக்கு நீதித்துறையே துணை நிற்பது வெட்கக்கேடானது என சீமான் விமர்சித்துள்ளார். வாக்கு வேட்டைக்காக சமூக அமைதியை கெடுக்க முயல்வதுதான் உங்களது (பாஜக, இந்து அமைப்புகள்) ஆன்மீகப்பற்றா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க தமிழர் எனும் இனஉணர்வோடு ஓர்மைப்படுவோம் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
News December 5, 2025
பாஜகவுடன் கூட்டணியா? விஜய் அறிவித்தார்

கரூர் சம்பவத்திலிருந்தே, NDA கூட்டணியில் விஜய்யை இணைக்க BJP விரும்புவதாக தகவல்கள் கசிந்தவாறு உள்ளன. இதற்கேற்றார் போலவே, தொட்டும் தொடாமல் BJP-யை விஜய் விமர்சித்து வருகிறார். இந்நிலையில், BJP உடன் இணக்கமாக உள்ளீர்களா என விஜய்யிடம் கேட்டதற்கு, அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக நாஞ்சில் தெரிவித்துள்ளார். மேலும், இங்கு (தமிழகம்) அதிகாரத்தில் உள்ள கட்சியை விஜய் விமர்சனம் செய்வதாகவும் தெரிவித்தார்.
News December 5, 2025
அனில் அம்பானியின் ₹10,000 கோடி முடக்கம்

வங்கி கடன் மோசடி வழக்கில், ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்திற்கு சொந்தமான ₹1,120 கோடி சொத்துக்களை ED இன்று முடக்கியுள்ளது. முன்னதாக, சமீபத்தில் ₹8,997 கோடியை முடக்கிய நிலையில், இன்றுடன் சேர்த்து ₹10,117 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து <<17314173>>அனில் அம்பானி<<>> மீது பிடியை இறுக்கி வரும் ED, நிதிக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.


