News June 5, 2024
அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வெற்றி

வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த், 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 2ஆவது இடத்தையும், அதிமுக வேட்பாளர் பசுபதி 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் மகேஷ் ஆனந்த் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
Similar News
News March 27, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு

நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் படைவீரர்களை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திட இப்பணிக்கு தக்க சிறப்பு ஊதியம் வழங்கப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் படைவிலகல் சான்று அடையாள அட்டையுடன் தங்களது விருப்பத்தினை முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் எழுத்து மூலமாக நேரிலோ தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News March 27, 2026
BREAKING: டாஸ்மாக் 4 நாள்கள் விடுமுறை

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி,TN முழுவதும் 4 நாள்கள் டாஸ்மாக் இயங்காது என்று ECI புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 21,22 மற்றும் வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதியும், டாஸ்மாக், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அனைத்து வகையான மதுக்கூடங்களும் மூடப்பட வேண்டும்; இந்த உத்தரவை மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
News March 27, 2026
Anna University-ல் மீண்டும் ஒரு பூகம்பம்..

அண்ணா பல்கலையில் பேராசிரியர் ஒருவர் 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவி ஒருவர் சென்னை கமிஷ்னரிடம் புகாரளித்துள்ளார். இரவு 10 மணிக்கு மேல் செல்போனில் ஆபாசமான மெசேஜ்களை பேராசிரியர் அனுப்புவதாகவும், இதை வெளியில் சொன்னால் தொலைத்துவிடுவேன் என அவர் மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பல மாணவிகளை பேராசிரியர் ஞானவேல் பாபு இப்படி செய்ததாக புகார் எழுந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


