News March 1, 2025
இந்தியை தேசிய மொழி என்ற அமைச்சர்

இந்தி மொழியை தேசிய மொழி என்று மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் இந்தி திணிப்பு தொடர்பான பிரச்னைகள் வெடித்துக் கொண்டிருக்கும் வேளையில், ”தேசிய மொழியான இந்தி, முழு நாட்டையும் ஒற்றுமையின் நூலில் இணைக்கும்” என்று அவர் பேசியிருக்கிறார். இதுகுறித்த உங்களது கருத்து என்ன?
Similar News
News March 15, 2026
பயிரை மேய்ந்த வேலி: அன்புமணி ஆவேசம்

<<19388010>>SP அந்தஸ்து அதிகாரியே<<>> பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததன் மூலம் TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக அன்புமணி விமர்சித்துள்ளார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே இப்படி நடந்து கொண்டுள்ளது பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் சாடியுள்ளார்.
News March 15, 2026
BREAKING: கோர பஸ் விபத்து.. 7 தமிழர்கள் பலி

தமிழகத்திலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் பஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இவர்களில் 2 பெண்கள், 5 ஆண்கள் அடங்குவர். அங்குள்ள மங்கம்மா கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்புகையில், கோர்கா மாவட்டத்தில் இந்த எதிர்பாராத சோகச் சம்பவம் நடந்துள்ளது. மேலும் 7 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து அந்நாட்டு போலீஸ் விசாரித்து வருகின்றனர்.
News March 15, 2026
தமிழ்நாடு தேர்தல் தேதி.. BIG UPDATE

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாட்டிற்கான 17-வது சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்னும் சற்றுநேரத்தில்(4 மணிக்கு) அறிவிக்கப்படவுள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள விக்யான் பவனில் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தேர்தல் தேதி உள்ளிட்ட பட்டியலை உடனுக்குடன் அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள். மேலும் <


