News July 7, 2025
பதவி நீக்கம்.. சில மணி நேரத்தில் அமைச்சர் தற்கொலை

ரஷ்யாவில் அதிபர் புதினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் சில மணிநேரங்களிலேயே தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உக்ரைனின் தாக்குதல் காரணமாக ரஷ்யாவில் விமான சேவை பாதிக்கப்பட்டதால் அந்த துறையின் அமைச்சர் ரோமன் ஸ்டாரோவாய்ட்டை புதின் பதவி நீக்கம் செய்தார். இதனையடுத்து, காருக்குள் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தன்னைத்தானே சுட்டு ரோமன் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News September 8, 2025
துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் கட்சிகள்

ஜனாதிபதி தேர்தல்களில் பலமுறை பாஜகவுக்கு கைகொடுத்த பிஜு ஜனதா தளம் கட்சி, இந்த முறை துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளது. எந்த தரப்புக்கும் ஆதரவில்லை எனத் தெரிவித்துள்ள அக்கட்சிக்கு ராஜ்ய சபாவில் 7 எம்பிக்கள் உள்ளனர். இந்த தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என தெலங்கானாவின் பிஆர்எஸ் கட்சியும் அறிவித்துள்ளது. இக்கட்சிக்கு ராஜ்ய சபாவில் 4 எம்பிக்கள் உள்ளனர்.
News September 8, 2025
நாளைக்குள் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்.. அறிவிப்பு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வாக, அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரே நாளில் ஒரு மரக்கன்றை நட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பெற்றோருடன் மரக்கன்றை நட்டு அதனை புகைப்படமாக எடுத்து அரசின் https://ecoclubs.education.gov.in இணையதளத்தில் நாளைக்குள் அப்லோடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் பசுமை இயக்க குழு பொறுப்பாசிரியர் இதனை ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
News September 8, 2025
தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மீது பாய்ந்தது வழக்கு

தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விஜய்யின் பிரசார பயணத்துக்கு அனுமதி கேட்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தபோது, போலீசாருக்கும், தவெகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அனுமதியின்றி கூடுதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.