News December 21, 2024
கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை

2025ஆம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச அதரவு விலக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை வழங்கியுள்ள ஒப்புதலின்படி அரவை கொப்பரை குவிண்டால் ஒன்றுக்கு ₹11,582 மற்றும் அரவைக்கு முந்தைய கொப்பரை, குவிண்டாலுக்கு ₹12,100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News July 5, 2025
பாமக தலைமை நிர்வாகக் குழு கலைப்பு!

பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவைக் கலைத்து புதிய குழுவை ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி, திலகபாமா, கே.பாலு, வெங்கடேஸ்வரன் தலைமையிலிருந்த தலைமைக் குழுவைக் கலைத்துவிட்டு, அன்புமணி, ஜி.கே.மணி, அருள், முரளி சங்கர், கரூர் பாஸ்கர், பரந்தாமன், தீரன், பு.தா.அருள்மொழி உள்ளிட்டோர் அடங்கிய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு யார் தலைவர் என்பதில் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது.
News July 5, 2025
காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்

மதுரை மேலூர் அருகே இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இளைஞர் தீபன் ராஜ் தனது காதலியான 19 வயது பெண்ணை தனிமையில் அழைத்துவிட்டு நெருக்கமாக இருந்துள்ளார். இதனையடுத்து, தீபன் ராஜின் உதவியுடன் அவரது நண்பர்களான மதன், திருமாறன் ஆகியோர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News July 5, 2025
தாஜ்மஹால் தெரியும்… பேபி தாஜ்மஹால் தெரியுமா?

முகலாய கட்டடக்கலையின் அற்புதங்கள்: ★ஹுமாயூன் கல்லறை (டெல்லி): 1558-ல் ஹுமாயூன் மனைவி பேகா பேகத் கட்டியது ★ஃபதேபூர் சிக்ரி (உ.பி): 1571-ல் அக்பரின் தலைநகரமாக விளங்கியது ★இதிமாத்-உத்-தெளலாவின் கல்லறை(1628): இது ‘பேபி தாஜ் மஹால்’ எனப்படுகிறது ★ஜமா மஸ்ஜித் (டெல்லி): 1656-ல் ஷாஜகான் கட்டியது ★பீபி கா மக்பரா (மகாராஷ்டிரா): 1661-ல் அவுரங்கசீப் கட்டியது ★அக்பர் கல்லறை(ஆக்ரா): 1613-ல் ஜஹாங்கீர் கட்டியது.