News September 28, 2024
மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க்

தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க் அமைய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கரூர், தி.மலையில் இதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பை விரிவுபடுத்த இரண்டாம், மூன்றாம் தர நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா செயல்பாட்டில் உள்ளன.
Similar News
News January 6, 2026
கள்ளக்குறிச்சி: LOAN CALL தொல்லையா..? இத பண்ணுங்க!

தினந்தோறும் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் செங்கல்பட்டு மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News January 6, 2026
பொங்கல் பரிசுத் தொகை ₹5,000 வழங்க வேண்டும்: EPS

பொங்கல் பரிசை உயர்த்தி வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விமர்சித்துள்ள EPS, எதிர்க்கட்சியாக இருந்தபோது பொங்கல் பரிசாக ₹5,000 கொடுக்க சொன்ன ஸ்டாலின், தற்போது ₹3,000 மட்டும் கொடுத்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் மக்களுக்கு ₹5,000 வழங்க திமுக அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
News January 6, 2026
‘ஜனநாயகன்’ படக்குழு ஐகோர்ட்டில் அவசர மனு!

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பே, தணிக்கை குழுவிற்கு படம் அனுப்பப்பட்ட நிலையில், இன்னும் சான்றிதழ் கிடைக்கவில்லை என படக்குழு குற்றம்சாட்டியுள்ளது. ரிலீசுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், இந்த வழக்கு இன்று மதியம் சுமார் 2 மணியளவில் விசாரணைக்கு வரவுள்ளது.


