News February 17, 2025
தாதுமணல் விவகாரம்: ஐகோர்ட் அதிரடி

தாதுமணல் கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு எதிராக TN அரசு நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடற்கரைகளில் இருந்து சட்டவிரோதமாக தாதுமணல் அள்ளியதால் அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட் சட்டவிரோதமாக மணல் அள்ளியதற்காக தனியார் நிறுவனங்களிடம் அபராதம் வசூலிக்கலாம் என ஆணையிட்டது. மேலும் சிபிஐ விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 15, 2026
பொள்ளாச்சி அருகே கோர விபத்து

பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரேமலதா, தனது காதலன் ராம்குமார் என்பவருடன் ராயல் என்பீல்டு வாகனத்தில் திருமூர்த்திமலைக்குச் சென்று திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த கோகுல் ஓட்டி வந்த கார் அதிவேகமாக மோதியதில், பிரேமலதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ராம்குமார் உடுமலை GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News March 15, 2026
ஒரே நாளில் 88 லட்சம் கேஸ் சிலிண்டர் புக்கிங்!

எங்கு நமக்கு சிலிண்டர் கிடைக்காமல் போகிவிடுமோ என்ற அச்சத்தில் பலரும் முண்டியடித்து புக்கிங் செய்து வருகின்றனர். கேஸ் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு தொடர்ந்து கூறி வந்தாலும் மக்களின் அச்சம் குறையவில்லை. நேற்று முன்தினம் மட்டும் 88 லட்சம் கேஸ் சிலிண்டர்கள் புக் செய்யப்பட்டதாக பெட்ரோலிய துறை தெரிவித்துள்ளது. இதனால் தேவையின்றி கேஸ் புக்கிங் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
News March 15, 2026
விஜய்யிடம் 2 நாள் விசாரணை நடத்த திட்டமா?

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 3-வது முறையாக இன்று CBI முன் விஜய் ஆஜராக உள்ளார். இதற்காக தனி விமானம் மூலம் நேற்று அவர் டெல்லி சென்றார். இதனிடையே அவரிடம் CBI 2 நாள்கள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் விசாரணைக்கு பின்னரே 2-வது நாள் தொடருமா என தெரிய வரும். எனினும் முன்கூடியே 2 நாள்களுக்கு தயாராக வர விஜய் தரப்பிடம் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


