News July 25, 2024

தற்போதைக்கு ஆவின் பால் விலை உயராது: அமைச்சர்

image

ஆவின் பால் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இப்போதைக்கு விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். விலை உயர்த்துவது குறித்து நுகர்வோர்களிடமும் முதல்வரிடமும் ஆலோசித்து வரும் காலங்களில் உயர்த்தப்படலாம் என்றார். மேலும், இந்தியாவில் எங்கும் இந்த அளவு குறைவான விலைக்கு பால் கிடைப்பதில்லை, எனவே விலை குறைக்க வாய்ப்பே இல்லை என்றார்.

Similar News

News March 8, 2026

BREAKING: வரும் 12-ம் தேதி தவெக போராட்டம்

image

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தவெக தலைவர் விஜய், அரசியல் ரீதியாக அடுத்தடுத்த நகர்வுகளை தீவிரப்படுத்தியுள்ளார். அந்த வகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி வரும் 12-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட, மா.செ.க்களுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் விஜய், ஆதவ் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News March 8, 2026

FLASH: சேலத்தில் EPS முக்கிய ஆலோசனை!

image

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாமல் இழுபறியில் உள்ள நிலையில், மூத்த நிர்வாகிகளுடன் EPS ஆலோசனை நடத்தினார். சேலத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் KC வீரமணி, செல்லூர் ராஜு, MR விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட EX அமைச்சர்கள் 7 பேர் பங்கேற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து OPS ஆதரவாளராக இருந்த செல்லமுத்து உள்பட 100-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

News March 8, 2026

5,000 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க

image

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5,000 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ₹15,000 வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, தாய் மொழியில் பேச்சு திறன் அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 3-ம் தேதிக்குள் இந்த <>லிங்க்கில்<<>> விண்ணப்பிக்கவும். SHARE.

error: Content is protected !!