News August 5, 2024
வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி?

வங்கதேசத்தில் உள்நாட்டு வன்முறை கட்டுப்படுத்த முடியாத அளவில் சென்றதால், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே போராட்டக் குழுவின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், ராணுவத் தளபதி நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ராணுவம் இடைக்கால ஆட்சி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 12, 2026
TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? விஜய் ஆவேசம்

தங்கள் கல்லாப்பெட்டி, கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தும் முதல்வரே, TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டதாக தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
News March 12, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,200 குறைந்தது

<<19359319>>சர்வதேச சந்தையில்<<>> ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக, இந்திய சந்தையில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,200 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹150 குறைந்து ₹14,970-க்கும், சவரன் ₹1,19,760-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில தினங்களாக ஏறுமுகத்திலிருந்த தங்கம் இன்று குறைந்துள்ளதால் தங்கம் வாங்க நினைத்தோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
News March 12, 2026
TN புதிய கவர்னர் இன்று பதவியேற்பு!

தமிழ்நாட்டின் புதிய(பொறுப்பு) கவர்னராக கேரள மாநில கவர்னராக உள்ள ராஜேந்திர அர்லேகர் இன்று பதவியேற்க உள்ளார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். கிண்டியில் உள்ள மக்கள் பவனில் பிற்பகல் 12:30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் CM ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.


